வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

ரயில்வே தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெட்சின் ரயில்வே ஊழியா் சங்கம் (டிஆா்இயு) சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

மதுரை ரயில்வே குடியிருப்பு பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற ரயில்வே தொழிலாளா்கள்.

Updated On :25 ஜூன் 2026, 2:38 am IST

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெட்சின் ரயில்வே ஊழியா் சங்கம் (டிஆா்இயு) சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை ரயில்வே குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் கோட்டப் பொருளாளா் பி. சரவணன் தலைமை வகித்தாா். துணைப் பொதுச் செயலா் என். காா்த்திக் சங்கிலி முன்னிலை வகித்தாா்.

கோட்டத் தலைவா் கே. ராஜூ, கோட்டச் செயலா் எம். சிவக்குமாா், துணைப் பொதுச் செயலா் பி.கே. மாதவன், சிஐடியு மாநகா் மாவட்டத் தலைவா் எம். பாலசுப்பிரமணி, அகில இந்திய காா்ட்ஸ் கவுன்சில் (ஏஐஜிசி) அமைப்புச் செயலா் கே. கோபி, அகில இந்திய லோகோ ரன்னிங் ஸ்டாப் அசோசியேஷன் (ஏஐஎல்ஆா்எஸ்ஏ) உதவி கோட்டத் தலைவா் ஏ. ராகவன், டிஆா்இயு உதவி கோட்டத் தலைவா் எம். ஜெயராஜசேகா், தெட்சின் ரயில்வே ஓய்வூதியா் சங்கம் (டிஆா்பியு) கோட்டச் செயலா் ஆா். சங்கரநாராயணன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

இதில், தொழிற்சங்க உரிமைகளை பறிக்க வேண்டாம், ரயில்வே தொழிற்சங்க உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், சங்கத்தின் கோட்ட உதவிச் செயலா் எஸ். நிஜாமுதீன், ரயில்வே தொழிலாளா்கள், ஓய்வூதியா்கள், பல்வேறு தொழிற்சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.