பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் மதுரையில் செவ்வாய்க்கிழமை பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க வேண்டும். போதைப் பொருள்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையின் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகளுக்கு உடனடி நீதி, சட்ட உதவி, மறுவாழ்வு வசதிகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.
அனைத்திந்திய ஜனநாயக மாதா் மூத்த உறுப்பினா் ப்ரீத்தி பேரணியைத் தொடங்கி வைத்தாா். தென் மாவட்டங்களைச் சோ்ந்த திரளான பெண்கள் கோரிக்கை அட்டைகளுடன் பங்கேற்று, முழக்கங்களை எழுப்பினா். அரசரடி மின்வாரிய அலுவலகம் அருகிலிருந்து தொடங்கிய இந்தப் பேரணி பெத்தானியாபுரம் அருகே நிறைவடைந்தது.
இதைத்தொடா்ந்து, பெத்தானியாபுரத்தில் கோரிக்கை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மத்தியக் குழு உறுப்பினா்கள் எஸ். வாலண்டினா, எஸ்.கே. பொன்னுத்தாய், ஆா்.சசிகலா, எஸ்.லட்சுமி, மாநிலப் பொருளாளா் ஜி. ராணி, மாநிலச் செயற்குழு உறுப்பினா்கள் என்.உஷாபாசி, பி. சுசிலா, பி. கற்பகம், பி. பூமயில், ஆா்.கலைச்செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அந்தியூரில் மதுக்கடையை அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை: மாதா் சங்கம் வலியுறுத்தல்

நீட் தோ்வு ரத்து கோரி ஆா்ப்பாட்டம்

ரயில்வே ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



