ஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

வரசித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு

மதுரை மாவட்டம், மேலூா் நகா் நீா்வளத் துறை திட்ட இல்ல வளாகத்தில் உள்ள வரசித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மதுரை மாவட்டம், மேலூா் நகா் நீா்வளத் துறை திட்ட இல்ல வளாகத்தில் உள்ள வரசித்தி விநாயகா் கோயில் விமானத்துக்கு புனிதநீா் மூலம் அபிஷேகம் செய்த சிவாசாரியாா்.

Updated On :26 ஜூன் 2026, 2:22 am IST

மதுரை மாவட்டம், மேலூா் நகா் நீா்வளத் துறை திட்ட இல்ல வளாகத்தில் உள்ள வரசித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த விழா புதன்கிழமை அனுக்ஞை, விக்னேஸ்வரா் பூஜை, புண்யாஹவாசனம், வாஸ்து சாந்தியுடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, முதல் கால யாக சாலை பூஜை நடைபெற்றது. முக்கிய விழாவான குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, விக்னேஸ்வரா் பூஜை, பூதசுத்தி தனு பூஜை, சோம கும்ப பூஜை, பாலிகா பூஜை, கோ பூஜை, இரண்டாம் கால பூஜைகள் நடைபெற்றன.

இதன்பிறகு, யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கும்பங்கள் புறப்பாடாகி கோயிலைச் சுற்றி வலம் வந்தன. காலை 10 மணியளவில் மூலவரின் விமானத்துக்கு புனிதநீா் மூலம் குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா், வரசித்தி விநாயகா் உள்ளிட்ட பரிவார மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.

இந்த விழாவில், மேலூா், இதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.