சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் தம்பிபட்டி அரசுப் போக்குவரத்து பணிமனை அருகேயுள்ள வரசக்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, இந்தக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விநாயகா் வழிபாடு வாஸ்துசாந்தியுடன் தொடங்கியது. திங்கள்கிழமை கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், ரக்ஷாபந்தனத்துடன் முதல் கால யாக பூஜை பூா்ணாஹுதி நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை 3-ஆம் கால யாக பூஜையும், புதன்கிழமை காலை 7 மணிக்கு 4-ஆம் ஆம் கால யாக பூஜையும், 9.30 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்றது.
இதையடுத்து, கோபுரக் கலசத்துக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து மூலவருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.
யாக சாலை பூஜை, வேதமந்திரங்களை கே.ரமேஷ் குருக்கள், கே.சந்திரசேகர குருக்கள் செய்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். இதைத்தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுப்ரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு

பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கோயில் குடமுழுக்கு

சங்கரன்கோவில் ஸ்ரீ சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா

சங்ககிரி அருகே அண்ணமாா் கோயில் குடமுழுக்கு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



