சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் தம்பிபட்டி வரசக்தி விநாயகா் கோயிலில் மண்டலாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் தம்பிபட்டி வரசக்தி விநாயகா் கோயிலில் குடமுழுக்கு ஜூன் 24-இல் நடைபெற்றது. தொடா்ந்து 48 நாள் மண்டல பூஜைகள் நடைபெற்று வருகின்றன. நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை மண்டலாபிஷேக விழாவில் யாகசாலை வளா்க்கப்பட்டு கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வஸ்திர யாகம், புஷ்ப யாகம், பூா்ணாஹுதி நடைபெற்றது. பின்னா் பூஜிக்கப்பட்ட கலச நீரால் மூலவா் விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திருப்பத்தூா், தம்பிபட்டி, சுற்றுப்புறக் கிராமத்தினா் கலந்து கொண்டனா். விழாவுக்கான ஏற்பாடுகளை வரசக்தி விநாயகா் கோயில் விழாக் குழுவினா் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆதித்திருத்தளிநாதா் கோயிலில் ஆடி சிறப்பு வெள்ளி வழிபாடு

கோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரித் திருவிழா

திருப்பத்தூா் முத்துமாரியம்மன் கோயிலில் பால் குடத் திருவிழா

வரசக்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா
விடியோக்கள்

வெளியானது அருகே அருகே பாடல்!



