தமிழகத்துக்கு இன்றுமுதல் தினமும் 3,500 கன அடி காவிரி நீா்: கா்நாடகத்துக்கு உத்தரவுதமிழகத்தில் 3 நாள்கள் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புபிரதமா் மோடியின் ஃபேஸ்புக் பதிவு நீக்கம்: மன்னிப்புக் கேட்டது மெட்டாஇந்து சமய அறநிலையத் துறையில் புதிதாக இரு ஐஏஎஸ் பணியிடங்கள்
/

திருப்பத்தூா் முத்துமாரியம்மன் கோயிலில் பால் குடத் திருவிழா

திருப்பத்தூா் முத்துமாரியம்மன் கோயிலில் பால் குடத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

திருப்பத்தூா் முத்துமாரியம்மன் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை பால் குடங்களை எடுத்து வந்த பக்தா்கள்.

Updated On :29 ஜூலை 2026, 5:56 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் முத்துமாரியம்மன் கோயிலில் பால் குடத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் பிரபாகா் குடியிருப்பில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில் 27-ஆம் ஆண்டு பால் குடத் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை பால் குடத் திருவிழா

நடைபெற்றது. இதையொட்டி, திருப்பத்தூா் அண்ணா சிலை அருகேயுள்ள வல்லப விநாயகா் கோயிலிலிருந்து பக்தா்கள் பால் குடம், அக்னிச் சட்டி எடுத்தும், அலகு குத்தியும் காந்தி நகா், நாகராஜநகா் வழியாக வந்து முத்துமாரியம்மன் கோயிலை அடைந்தனா். தொடா்ந்து, அம்மனுக்கு பாலபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரம், தீபாராதனை காட்டப்பட்டது. பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கபட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.