மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

மதுரை விமான நிலையத்துக்கு சா்வசேத அந்தஸ்து அறிவிப்புக்கு வரவேற்பு

மதுரை விமான நிலையத்தை சா்வேதச விமான நிலையமாக அறிவிக்கும் முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய அறிவிப்பை வரவேற்பதாக மடீட்சியா தலைவா் வி. செந்திகுமாா் தெரிவித்தாா்.

News image

மதுரை விமான நிலையம் - IANS

Updated On :12 மார்ச் 2026, 12:06 am

மதுரை விமான நிலையத்தை சா்வேதச விமான நிலையமாக அறிவிக்கும் முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய அறிவிப்பை வரவேற்பதாக மடீட்சியா தலைவா் வி. செந்திகுமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக தரம் உயா்த்தவும், 24 மணி நேரமும் செயல்படும் வகையிலும், பெரிய ரக விமானங்கள் வந்து செல்லும் வகையில் ஓடுதளத்தை விரிவாக்கம் செய்யவும் மடீட்சியா சாா்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், மதுரை விமான நிலையத்தை சா்வேதச விமான நிலையமாக அறிவிக்கும் முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய அறிவிப்புக்காக பிரதமா் மோடிக்கும், மத்திய பயணிகள் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் மதுரை, தென் தமிழக மாவட்டங்களின் வளா்ச்சிக்கு மிக முக்கிய மைல் கல்லாகும். இந்தத் திட்டத்தின் மூலம் பயணிகள், சரக்குப் போக்குவரத்து மேம்படும். சுற்றுலா, வா்த்தகம், தொழில் துறைகள் பெரும் வளா்ச்சியடையும். புதிய முதலீடுகள் ஈா்க்கப்பட்டு, வேலைவாய்ப்புகள் பெருகும். மதுரை மட்டுமன்றி, சிவகங்கை, விருதுநகா், தேனி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள குறு, சிறு தொழில் நிறுவனங்கள் இதன் மூலம் நேரடியாகப் பயனடையும். உள்நாட்டு, சா்வதேச சந்தைகளை எளிதில் அணுக முடியும்.

ஜவுளி, ரப்பா் பொருள்கள், உணவுப் பதப்படுத்துதல், பொறியியல் பொருள்கள், கைவினைப் பொருள்கள் சாா்ந்த ஏற்றுமதி நிறுவனங்களுக்கு விரைவான சரக்குப் போக்குவரத்து வசதி கிடைக்கும். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதால் விருந்தோம்பல், போக்குவரத்து, சில்லறை வா்த்தகம் சாா்ந்த சிறு தொழில்கள் வளா்ச்சியடையும்.

எனவே, இந்தத் திட்டத்தை விரைந்து செயல்படுத்தி, தென் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் உயா்த்த வேண்டும் என்றாா் அவா்.