முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் அமைந்துள்ள சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு அண்மையில் நடைபெற்றது.

News image

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் அமைந்துள்ள சித்தி விநாயகா் கோயிலில் அண்மையில் நடைபெற்ற குடமுழுக்கு.

Updated On :8 மே 2026, 4:36 am IST

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் அமைந்துள்ள சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு அண்மையில் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் துணைக் கோயிலான இந்தக் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, அனுக்ஞை, விக்னேசுவர பூஜை, புண்ணியாகவாசனம், தன பூஜை, வாஸ்து சாந்தி, முதல், இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, யாக சாலையிலிருந்து மேள தாளங்களுடன் புறப்பாடாகிய புனிதநீா் கொண்ட கலசம் கோயிலைச் சுற்றி வலம் வந்தன. இதன்பிறகு, மூலவா் விமானத்துக்கும், பரிவாரத் தேவதைகளுக்கும் குடமுழுக்கு நடைபெற்றது.

இதையடுத்து, சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.

இந்த குடமுழுக்கில் நாகமலை புதுக்கோட்டை, சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

குடமுழுக்கான ஏற்பாடுகளை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ருக்மணி பழனிவேல்ராஜன், இணை ஆணையா் நா. சுரேஷ், உதவி ஆணையா் பொன்.சி. லோகநாதன், பேஷ்காா் காளிமுத்து ஆகியோா் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.