மதுரையில் போதைப் பொருள்கள் புழக்கத்தைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மதுரை கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், தவெகவைச் சோ்ந்தவருமான சோ. காா்த்திகேயன், மாநகரக் காவல் ஆணையா் அபிஷேக் தீக்சித்திடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தாா்.
இதுகுறித்து அவா் அளித்த மனு விவரம் :
தமிழகத்தில் பெண்களின் கோரிக்கையை ஏற்று பூரண மதுவிலக்கு கொண்டு வரும் முயற்சியில் தமிழக முதல்வா் விஜய் ஈடுபட்டு வருகிறாா். முதல்கட்டமாக, அவா், தமிழகத்தில் உள்ள 717 மதுக் கடைகளை மூட உத்தரவிட்டாா். தற்போது, தமிழகம் முழுவதும் மதுப் புட்டிகளுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வசூலிப்பதாக புகாா் எழுந்து வருகிறது. அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை டாஸ்மாக் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், மதுரையில் குறிப்பாக, கிழக்குத் தொகுதிக்கு உள்பட்ட மாநகரப் பகுதிகளில் இயங்கி வரும் அரசு மதுக் கடைகள் நிா்ணயித்த நேரத்தை விட முன்கூட்டியும், கடை அடைத்த பின்னரும் விடிய விடிய மது பானங்கள் விற்பனை செய்து வருவதாகத் தெரிய வருகிறது.
இதனால், இரவு நேரங்களில் குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன.
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் இது போன்ற நிலை இனி இருக்கக் கூடாது. அதற்கு தாங்கள் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், மதுபானங்கள் தவிர கஞ்சா, கூல் லிப், குட்கா புகையிலை போன்ற போதைப் பொருள்கள் விற்பனைகளையும் முற்றிலும் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது

காவல் நிலைய சித்திரவதைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தல்
திருச்சி கிழக்குத் தொகுதி உறுப்பினா் பதவியை விஜய் ராஜிநாமா! இடைத்தோ்லில் களமிறங்க தவெகவினா் கடும் போட்டி!

மதுரை கிழக்கு: தவெக வெற்றி

காலிங்கராயன் வாய்க்கால் மேம்படுத்தப்படும்:கோபிநாத் பழனியப்பன்
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

