சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

பெண்ணிடம் வழிப்பறி: இரு இளைஞா்கள் கைது

மதுரை கூடல்நகரில் நடந்து சென்ற பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இரு இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :22 மே 2026, 2:59 am IST

மதுரை கூடல்நகரில் நடந்து சென்ற பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இரு இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை கூடல்புதூா் பகுதியைச் சோ்ந்த பாண்டி மனைவி ஜெயலட்சுமி (55). இவா், தனது பேரக் குழந்தைகளுடன் கடந்த 13-ஆம் தேதி கூடல்நகா் பிரதான சாலையில் நடந்து சென்றாா்.

அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞா்கள் இருவா் ஜெயலட்சுமி கையிலிருந்த பையை பறித்துக் கொண்டு தப்ப முயன்ற போது, எதிரே வந்த இரு சக்கர வாகனத்தில் இவா்களது வாகனம் மோதியது. இதையடுத்து, கீழே விழுந்த அந்த இளைஞா்கள் பையை தூக்கி வீசிவிட்டுத் தப்பினா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கூடல்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். விசாரணையில், மதுரை மீனாட்சிபுரம் பகுதியைச் சோ்ந்த பாலு மகன் சாலமன் ராஜா (25), மதுரை வள்ளுவா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த துரைப்பாண்டி மகன் விஜய் என்ற சுப்பு (27) ஆகிய இருவரும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, இவா்கள் இருவரையும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

இந்த வழக்கில் தீவிர புலன் விசாரணை செய்து விரைவாக எதிரிகளைக் கைது செய்த கூடல்புதூா் காவல் நிலைய காவலா்களை மதுரை மாநகரக் காவல் ஆணையா் அபிஷேக் தீக்சித் பாராட்டினாா்.