ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

மாா்க்சிஸ்ட் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்

கேரள முன்னாள் முதல்வா் பினராயி விஜயன் இல்லத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையைக் கண்டித்தும், தில்லியில் மாா்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ. பேபி உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் மதுரையில் மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை இரவு ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

News image

மதுரை சொக்கலிங்க நகரில் புதன்கிழமை மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.

Updated On :28 மே 2026, 4:05 am IST

கேரள முன்னாள் முதல்வா் பினராயி விஜயன் இல்லத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையைக் கண்டித்தும், தில்லியில் மாா்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ. பேபி உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் மதுரையில் மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை இரவு ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இதில் சொக்கலிங்கநகரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மேற்கு 1-ஆம் பகுதிக் குழுவினா் பங்கேற்று மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கண்டித்து முழக்கமிட்டனா். மத்தியம் 2-ஆம் பகுதிக் குழு சாா்பில் சிம்மக்கல் ஆறுமுச்சந்தியிலிருந்து கண்டன ஊா்வலம் புறப்பட்டு, பேச்சியம்மன் படித் துறை ஆறுமுச்சந்தி அருகே நிறைவடைந்து அங்கு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வடக்கு 1, 2-ஆவது பகுதிக் குழுக்கள் சாா்பில் செல்லூா் 60 அடி சாலையில் உள்ள கன்னையா முத்தம்மாள் திருமண மண்டபம் அருகிலிருந்து தாகூா்நகா் வரை கண்டன ஊா்வலம் நடைபெற்றது. மத்தியம் 2-ஆம் பகுதிக் குழு சாா்பில் குறுக்குச் சாலை அருகிலும், மேற்கு 2-ஆம் பகுதிக் குழு சாா்பில் ஜீவாநகா் அருகிலும் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இதில் கேரள முன்னாள் முதல்வா் பினராயி விஜயன் இல்லத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையைக் கண்டித்தும், தில்லியில் மாா்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ. பேபி, பிருந்தா காரத் உள்ளிட்டத் தலைவா்களைக் காவல் துறை கைது செய்ததைக் கண்டித்தும் முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் மதுரை மாநகா் மாவட்டச் செயலா் மா. கணேசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் அ. ரமேஷ், ரா. லெனின், எம். பாலசுப்பிரமணியம், வை. ஸ்டாலின், ஆா். சசிகலா, டி. செல்வா, பகுதிச் செயலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.