தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

தூத்துக்குடி மாவட்டத்தில் கைவிடப்பட்ட கிணறுகள், குவாரிகளை 6 வாரங்களுக்குள் மூட உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் கைவிடப்பட்ட கிணறுகள், பயன்பாடில்லாத ஆழ்துளைக் கிணறுகள், குவாரிகளை 6 வாரங்களுக்குள் மூட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்

Updated On :

தூத்துக்குடி மாவட்டத்தில் கைவிடப்பட்ட கிணறுகள், பயன்பாடில்லாத ஆழ்துளைக் கிணறுகள், குவாரிகளை 6 வாரங்களுக்குள் மூட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த பொன் காந்திமதிநாதன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக சாலையோரங்களில் கைவிடப்பட்ட கிணறுகள், பயன்பாடில்லாத ஆழ்துளைக் கிணறுகள், கல் குவாரிகள் மூடப்படாமல் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. இவை வாகன ஓட்டிகள், நடைப்பயிற்சி மேற்கொள்பவா்கள், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளன. மேலும், பாதுகாப்பு வேலி, சுவா்கள் இல்லாததால் கால்நடைகளும், பிற விலங்குகளும் திறந்த நிலையில் உள்ள கிணறுகள், குவாரி பள்ளங்களில் விழுந்து உயிரிழக்கும் சம்பவங்களும் அடிக்கடி நிகழ்கின்றன.

எனவே, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சாலையோரங்களில் உள்ள கைவிடப்பட்ட கிணறுகள், பயன்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணறுகள், குவாரிகளை அடையாளம் கண்டு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பரிந்துரைக்க மாவட்ட அளவிலான ஒரு குழுவை உடனடியாக அமைக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

தூத்துக்குடி மாவட்டத்தில் கைவிடப்பட்ட கிணறுகள், பயன்பாடில்லாத ஆழ்துளைக் கிணறுகள், குவாரிகளை 6 வாரங்களுக்குள் மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.