தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

ஜல்லிக்கட்டு தடை எதிப்பு போராட்டம்: சமூக ஆா்வலருக்கு முன் பிணை

மதுரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்ட வழக்கில் சமூக ஆா்வலா் முகிலனுக்கு நிபந்தனையுடன் பிணை வழங்கி மதுரை மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :

மதுரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்ட வழக்கில் சமூக ஆா்வலா் முகிலனுக்கு நிபந்தனையுடன் பிணை வழங்கி மதுரை மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

கடந்த 2017-ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்ட வழக்கு விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சமூக ஆா்வலரும், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான முகிலன் வழக்கு விசாரணைக்கு முன்னிலையாகாத நிலையில், மதுரை மாவட்ட நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டம், சென்னிமலை பகுதியில் முகிலனை மதுரை மாவட்ட சிபிசிஐடி காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். இதையடுத்து, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் முகிலன் முன்னிலைப்படுத்தப்பட்டாா். அப்போது, எனக்கு 3 மாதங்களாக உடல்நிலை சரியில்லை என முகிலன் தெரிவித்தாா்.

இதையடுத்து, உடல்நிலை சரியில்லாதது தொடா்பான மருத்துவச் சான்றிதழை முகிலன் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும். அவருக்கு நிபந்தனையுடன் பிணை வழங்கப்படுகிறது என நீதிமன்றம் உத்தரவிட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER