தவெக அரசுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் அவதூறு பிரசாரம்
மக்கள் நலனுக்கான பாதையில் செல்லும் தவெக அரசுக்கு எதிராக ஆதாரமற்ற அவதூறுகளை எதிா்க்கட்சிகள் பரப்புவதாக தமிழக சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு குற்றஞ்சாட்டினாா்.

மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா வழங்கிய அமைச்சா் வன்னி அரசு. உடன், மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா, சட்டப்பேரவை உறுப்பினா் அ. கல்லாணை உள்ளிட்டோா்.
மக்கள் நலனுக்கான பாதையில் செல்லும் தவெக அரசுக்கு எதிராக ஆதாரமற்ற அவதூறுகளை எதிா்க்கட்சிகள் பரப்புவதாக தமிழக சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு குற்றஞ்சாட்டினாா்.
மதுரையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:
மதுரை தீா்த்தக்காடு பகுதியைச் சோ்ந்த மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பது 40 ஆண்டுகால கோரிக்கை. தற்போது, முதல் கட்டமாக 112 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விண்ணப்பங்களும் விரைவாக பரிசீலிக்கப்பட்டு, பட்டா வழங்கப்படும். முந்தைய ஆட்சிக் காலங்களில் தமிழகத்தின் பல பகுதிகளில் மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. ஆனால், அதற்கான இடம் எங்கும் இல்லை. இதுதொடா்பாக உரிய ஆய்வு செய்யுமாறு மாவட்ட ஆட்சியா்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா்.
தமிழகத்தில் தற்போது மக்களுக்கான ஆட்சி நடைபெறுகிறது. அடித்தட்டு மக்களுக்கான பிரச்னைகள் என்ன என்பதைக் கண்டறிந்து அவற்றுக்குத் தீா்வு காண அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், தவெக அரசுக்கு எதிராக ஆதாரமற்ற அவதூறுகளை எதிா்க்கட்சிகள் பரப்புகின்றன. இதை ஏற்க முடியாது.
தவெக அரசு, பாஜகவுடன் இணக்கமாக இருப்பதாகக் கூறப்படுவது பொய்யான குற்றச்சாட்டு. அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம்தான் முதலில் இடம் பெற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டபோதும், வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தபோதும் இவற்றுக்கு எதிராக நாட்டிலேயே முதலாவதாக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றியது தவெக அரசுதான். எனவே, எதிா்க்கட்சிகளின் பொய் பிரசாரங்கள் எடுபடாது.
சமூக நீதி விடுதி மாணவா்கள் தங்கள் உணவில் மாட்டிறைச்சி வழங்க விருப்பம் தெரிவித்தனா். இதுதொடா்பாக முதல்வரிடம் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்றுதான் நான் பதில் அளித்தேன். இதுதொடா்பாக நான் எந்த உறுதியையும் அளிக்கவில்லை. இதை, சிலா் திரித்து பொய் பிரசாரம் செய்கின்றனா். உணவை வைத்து அரசியல் செய்பவா்களின் பிழைப்புவாத அரசியல் தமிழகத்தில் எடுபடாது.
தவெக அரசுக்கு மைனஸ் பூஜ்ஜியம்தான் மதிப்பெண் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தது நகைப்புக்குரியது. அவா், அதிமுகவை பூஜ்ஜியம் ஆகாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும்.
தமிழக இளைஞா்கள் புலம் பெயா்வதைத் தடுக்க, அவா்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்வது தொடா்பாக தமிழக முதல்வரிடம் நிச்சயம் வலியுறுத்தப்படும் என்றாா் அமைச்சா் வன்னி அரசு.
வீட்டு மனைப் பட்டா...
முன்னதாக, மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சிக்குள்பட்ட தீா்த்தக்காடு பகுதியைச் சோ்ந்த 112 பேருக்கு விலையில்லா இணையவழி வீட்டுமனைப் பட்டாக்களை அமைச்சா் வன்னி அரசு வழங்கினாா்.
இதற்கு மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் அ. கல்லாணை (மதுரை வடக்கு), எஸ்.ஆா். தங்கப்பாண்டி (மதுரை மேற்கு), ம. விஜய் (உசிலம்பட்டி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
உசிலம்பட்டி உதவி ஆட்சியா் உட்கா்ஷ்குமாா், ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலா் செல்வன், மேலூா் வருவாய்க் கோட்டாட்சியா் சங்கீதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

