தவெக கூட்டணிக்கு பாமக வந்தால், விசிக வெளியேறும்! அமைச்சர் வன்னி அரசு
திமுக - அதிமுக போன்று சராசரி கட்சி அல்ல விசிக; இதுவொரு விடுதலை இயக்கம் என வன்னி அரசு பேசியது குறித்து...

அமைச்சர் வன்னி அரசு - எக்ஸ்
தவெக கூட்டணியில் பாமக இடம்பெற்றால் விசிக வெளியேறும் என அமைச்சர் வன்னிஅரசு இன்று (அக். 11) தெரிவித்தார்.
திண்டிவனத்தில் விசிக சார்பில் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு அமைச்சர் வன்னி அரசு பேசியதாவது:
''பாமக இடம்பெறும் கூட்டணியில் விசிக இருக்குமா? என்று பலர் கேட்கின்றனர். இதற்கு பலமுறை பதில் அளித்து ஓய்ந்துவிட்டோம். எங்கள் நிலைப்பாடு என்றுமே மாறாது.
சாதி ஒழிப்புக்கு எதிரானது விசிக. அமைச்சர் பதவி இருக்கும்; இல்லாமல் போகும். எனக்கு பதவி முக்கியம் அல்ல. அண்ணன் திருமாவளவன்தான் முக்கியம். அவர் மேற்கொண்டுள்ள இலக்கை நோக்கி பயணிப்பதுதான் நோக்கம். பாமக உள்ளே வந்தால் கூட்டணியில் இருந்து விசிக வெளியேறும்.
பதவிக்காக திருமாவளவனை விமர்சிக்கின்றனர். தேர்தல் புறக்கணிப்பு பாதையில் நின்றது விசிக. அதிமுக - திமுக போன்று சராசரி கட்சி அல்ல விசிக. இதுவொரு விடுதலை இயக்கம். விடுதலைதான் எங்கள் லட்சியம்.
2008 அக்டோபர் தமிழ் ஈழத்தின் கடைசி காலகட்டம். தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளின் தளபதியாக செயல்பட்டவர் திருமாவளவன் என விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடல்படைத் தளபதி சூசை அன்று கூறினார். அந்த அளவுக்கு தமிழ்த் தேசியக் கொள்கையில் நிலையாக இருந்தவர் திருமாவளவன்.
ஆனால், இன்று பிரபாகரன் பெயரை வைத்துக்கொண்டு பிழைப்புவாதம் செய்கின்றனர் பலர். ஆனால், விசிக மேற்கொள்ளும் தமிழ்த் தேசியம் என்பது சாதி ஒழிப்பு. அதுதான் தமிழ்த் தேசிய சாதி ஒழிப்பு'' என வன்னி அரசு பேசினார்.
Summary
If the PMK enters, the VCK will leave alliance Minister Vanni Arasu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


