பிரதமர் மோடிக்கும் ராகுல் காந்திக்கும் வேறுபாடு இதுதான்? மாணிக்கம் தாகூர்
ராகுல் காந்திக்கும் இடையிலான வேறுபாடு தமிழ்நாட்டில் தெளிவாகத் தெரிகிறது என மாணிக்கம் தாகூர் பேசியது குறித்து...

நரேந்திர மோடி / ராகுல் காந்தி - பிடிஐ
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்திக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான வேறுபாடு குறித்து காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
''ராகுல் காந்திக்கும் இடையிலான வேறுபாடு தமிழ்நாட்டில் தெளிவாகத் தெரிகிறது!
நேற்று, அன்பு தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாட்டு மக்களிடம் ஆங்கிலத்தில் மட்டுமே உரையாற்றினார்.
இன்று மோடியும் தொடக்கத்தில் ஓரிரு நிமிடங்கள் ஆங்கிலத்தில் பேசிவிட்டு, பின்னர் இந்தியில் தொடர்ந்து பேசிவருகிறார்.
இது இந்தி திணிப்பு.
தமிழ்நாடு தனது மொழி, பண்பாடு, அடையாளம் ஆகியவற்றில் பெருமை கொள்ளும் மண். எல்லா மொழிகளையும் வரவேற்கிறோம். ஆனால், ஒரு மொழியை மற்ற மொழி பேசும் மக்கள் மீது திணிப்பதை ஒருபோதும் ஏற்க மாட்டோம்.
ஒரு மொழியைக் கற்பது அவரவர் விருப்பம்; ஒரு மொழியைத் திணிப்பது அரசியல் நோக்கம்!
இந்தியாவின் ஒவ்வொரு மொழிக்கும் உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும். ஒரு மொழியைத் திணிப்பதில் அல்ல, அனைத்து மொழிகளையும் மதிப்பதில்தான் இந்தியாவின் ஒற்றுமை அடங்கியிருக்கிறது.
தமிழ் எங்கள் அடையாளம்! மொழித் திணிப்புக்கு என்றும் இடமில்லை!'' எனக் குறிப்பிட்டார்.
திரà¯. à®®à¯à®à®¿à®à¯à®à¯à®®à¯
— Manickam Tagore .Bð®ð³à®®à®¾à®£à®¿à®à¯à®à®®à¯ தாà®à¯à®°à¯.ப (@manickamtagore) October 11, 2026
திரà¯. ராà®à¯à®²à¯ à®à®¾à®¨à¯à®¤à®¿à®à¯à®à¯à®®à¯ à®à®à¯à®¯à®¿à®²à®¾à®© வà¯à®±à¯à®ªà®¾à®à¯ தமிழà¯à®¨à®¾à®à¯à®à®¿à®²à¯ தà¯à®³à®¿à®µà®¾à®à®¤à¯ தà¯à®°à®¿à®à®¿à®±à®¤à¯!
நà¯à®±à¯à®±à¯, à®à®©à¯à®ªà¯ தலà¯à®µà®°à¯ ராà®à¯à®²à¯ à®à®¾à®¨à¯à®¤à®¿ தமிழà¯à®¨à®¾à®à¯à®à¯ à®®à®à¯à®à®³à®¿à®à®®à¯ à®à®à¯à®à®¿à®²à®¤à¯à®¤à®¿à®²à¯ à®®à®à¯à®à¯à®®à¯ à®à®°à¯à®¯à®¾à®±à¯à®±à®¿à®©à®¾à®°à¯.
à®à®©à¯à®±à¯
à®®à¯à®à®¿à®¯à¯à®®à¯ தà¯à®à®à¯à®à®¤à¯à®¤à®¿à®²à¯ à®à®°à®¿à®°à¯ நிமிà®à®à¯à®à®³à¯ à®à®à¯à®à®¿à®²à®¤à¯à®¤à®¿à®²à¯ பà¯à®à®¿à®µà®¿à®à¯à®à¯, பினà¯à®©à®°à¯â¦ pic.twitter.com/OslZ1UFnFm
Summary
Is this the difference between Prime Minister narendra Modi and Rahul Gandhi Manickam Tagore
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


