அருள் விக்னேஷை கைது செய்ய வேண்டும்; வெட்கி தலைகுனிய..! மாணிக்கம் தாகூர்!
அருள் விக்னேஷை கைது செய்ய வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் கூறியது பற்றி...
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் - கோப்புப் படம்
கள்ளகுறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை கைது செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் தனது வாட்ஸ்அப் எண்ணிலிருந்து பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், அவரது அரசு இல்லத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்றதாகவும் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவர் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்து மாணிக்கம் தாகூர் பேசியதாவது:
”பெண்களுக்கு எதிராக குற்றம் செய்பவர் யாராக இருந்தாலும் மிகவும் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். கள்ளகுறிச்சி சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவரே இதுபோன்ற செயலை செய்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் நடைபெறும் போது புகார் அளிப்பது மிகவும் முக்கியமான ஒன்று. வேலை செய்யும் இடங்களில் பெண்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமான ஒன்று. அவர்களுக்கான மரியாதை மிகவும் அவசியமானது.
கள்ளகுறிச்சி எம்.எல்.ஏ. விக்னேஷுக்கு எதிராக புகார் வந்துள்ளது. உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுத்து காவல்துறையினர் கைது செய்ய வேண்டும். பெண்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டப்பேரவை உறுப்பினரே இதைச் செய்திருப்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயம். தமிழ்நாடு முதல்வரின் கையில் காவல்துறை உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
கள்ளகுறிச்சி எம்.எல்.ஏ. விவகாரம் பொதுவெளியில் வந்தபோது செய்தியாளர்களை சந்தித்த மாணிக்கம் தாகூர், ”வாட்ஸ் ஆப்பில் பொய்யாக பரப்பப்படும் செய்தியை அனைவரையும் பகிர்ந்து வருகின்றனர். அவர் பாவம்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
Summary
Arul Vignesh must be arrested; a matter for deep shame! — Manickam Tagore
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

