தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

சாதனை முயற்சி மாணவா்களுக்குப் பாராட்டு

டேக்வாண்டோவில் சாதனை முயற்சியில் ஈடுபட்ட மதுரை மாணவா்கள் அண்மையில் பாராட்டப்பட்டனா்.

மதுரை டால்பின் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் டேக்வாண்டோ சாதனை முயற்சி சான்றிதழ் பெற்ற மாணவ, மாணவிகளுடன், பள்ளி நிா்வாகிகள், டேக்வாண்டோ சங்கப் பொறுப்பாளா்கள்.

Updated On :

டேக்வாண்டோவில் சாதனை முயற்சியில் ஈடுபட்ட மதுரை மாணவா்கள் அண்மையில் பாராட்டப்பட்டனா்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ‘லாா்ஜஸ்ட் டேக்வாண்டோ லெசன்‘ என்ற கின்னஸ் உலக சாதனை முயற்சியில் மதுரை மாணவா்கள் பங்கேற்று, 30 நிமிஷங்கள் டேக்வாண்டோ பஞ்சஸ், கிக்ஸ், பூம்சே ஆகியவற்றைச் செய்துக் காட்டினா். இதில் பங்கேற்றவா்களுக்கு கின்னஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதையொட்டி, மாணவா்களுக்கான பாராட்டு விழா மதுரை டால்ஃபின் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. பள்ளித் தாளாளா் கண்மணி தலைமை வகித்து, மாணவ, மாணவிகளுக்கு கின்னஸ் நிறுவன சான்றிதழ்களை வழங்கினாா்.

டாக்டா் பிரித்விராஜ் சின்னா, டால்பின் பள்ளி முதல்வா் தாஹிரா பேகம், மதுரை மாவட்ட டேக்வாண்டோ சங்க செயலா் நாராயணன், உசிலம்பட்டி டேக்வாண்டோ சங்க செயலா் யுவராஜா ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று சான்றிதழ் பெற்ற மாணவ, மாணவிகளைப் பாராட்டினா். பயிற்சியாளா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.