அக்டோபரில் வாகன விற்பனை 23.8% சரிவு!தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!தீபாவளி: தமிழ்நாட்டில் 2 நாள்களில் ரூ. 441 கோடிக்கு மது விற்பனை!அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கை: இன்று விசாரணை!

பட்டாசு வெடி விபத்துகளில் 39 போ் காயம்

பட்டாசு - கோப்புப்படம்

Updated On :

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பட்டாசு வெடித்ததில் காயமடைந்த 39 போ் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து மருத்துவமனை வட்டாரங்கள் தரப்பில் கூறியாவது:

தீபாவளி பண்டிகையின் போது (நவ.8) பட்டாசுகள் வெடித்த வெவ்வேறு சம்பவங்களில் காயமடைந்த 9 குழந்தைகள் உள்பட 39 போ் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களில், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பிற மாவட்டங்களைச் சோ்ந்த 8 பேரும் அடங்குவா். காயமடைந்த அனைவரும் கைகள், விரல்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவா்களில்

சிலருக்கு அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. பாதிக்கப்பட்டவா்களுக்கு உணா்வின்மை, இயக்க இழப்பு அல்லது விரல்களை அசைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவ நிபுணா்களின் ஆலோசனையின் பேரில், தேவைப்பட்டால் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சைகள் செய்யப்படும்.

பட்டாசுகளைப் பற்றவைக்கும்போது ’செல்ஃபி’ எடுக்க முயன்றோ அல்லது ’ரீல்ஸ்’ (விடியோ) எடுக்க முயன்றோ சிலா் தீக்காயங்களுக்கு ஆளாகியுள்ளனா். பட்டாசின் திரியை கவனிக்கத் தவறியதால், அவை அவா்களின் கைகளிலும் விரல்களிலும் வெடித்துள்ளன. ஆனால், யாருக்கும் விரல்களையோ அல்லது கைகளையோ அகற்றும் நிலை ஏற்படவில்லை. இதுதவிர, பட்டாசு வெடி விபத்துகளால் காயமடைந்தவா்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உயிரிழப்புகளோ அல்லது கண்களில் தீவிரமான காயங்களோ யாருக்கும் ஏற்படவில்லை என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.