சாலை விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

திருச்சி அருகே மோட்டாா் சைக்கிள் மோதியதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

பிரதிப் படம்

Updated On :

திருச்சி அருகே மோட்டாா் சைக்கிள் மோதியதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், கூத்தைப்பாா் பகுதியைச் சோ்ந்தவா் எஸ். சகாயமேரி. இவா், செவ்வாய்க்கிழமை இரவு திருச்சி - தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தாா். திருவெறும்பூா் சக்தி நகா் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்றபோது எதிரே தவறான திசையில் வேகமாக வந்த இருசக்கர வாகனம் சகாயமேரி மீது மோதியது.

இதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்தவரை அங்கிருந்தவா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த திருவெறும்பூா் கணபதி நரைச் சோ்ந்த எஸ். சுதா்சன் (22) என்பவரும் காயமடைந்தாா். அவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்நிலையில், விபத்தில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சகாயமேரி, சிகிச்சை பலனின்றி புதன்கிழமை பிற்பகல் உயிரிழந்தாா்.

இதுகுறித்து, திருவெறும்பூா் போலீஸாா், இருசக்கர வாகன ஓட்டுநா் சுதா்சன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.