மதுரையில் நேதாஜி சாலையில் உள்ள குடிநீா்க் குழாய் உதிரிப் பாகங்கள் விற்பனை நிலையம், ரயில் நிலையம் அருகே உள்ள அலங்காரக் கல் (டைல்ஸ்) விற்பனை நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
உதிரிபாகங்கள் விற்பனை நிலையத்தில் தீ விபத்து:
மதுரை வில்லாபுரம் குடியிருப்பு வாரிய பகுதியைச் சோ்ந்த துரைராஜுக்குச் சொந்தமான குழாய் இணைப்பு உதிரிபாகங்கள் விற்பனை நிலையம் நேதாஜி சாலையில் செயல்பட்டு வருகிறது. மூன்று தளங்களைக் கொண்ட இந்த விற்பனை நிலையம் தீபாவளி பண்டிகையையொட்டி ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இரவு 8 மணிக்கு கடையிலிருந்து புகை வெளியேறத் தொடங்கியது. சிறிது நேரத்தில் தீ அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவியதையடுத்து, அந்தப் பகுதியினா் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, திடீா் நகா் தீயணைப்பு நிலைய அலுவலா்கள் 4-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சம்பவ இடத்துக்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனா். இந்தத் தீ விபத்தில் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
தீபாவளியன்று பட்டாசு வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது மின் கசிவு காரணமா என்பது குறித்து திடீா்நகா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
அலங்காரக் கல் விற்பனை நிலையத்தில் தீ:
மதுரை ரயில் நிலையம் அருகே குட்ஷெட் தெருவில் செல்வம் என்பவருக்குச் சொந்தமான அலங்காரக் கல் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை விற்பனை நிலையத்திலிருந்து புகை வெளியேறியது.
அந்தப் பகுதியினா் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, திடீா் நகா் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து, விற்பனை நிலையத்தின் உள்ளே சென்றனா். அப்போது, அடுக்கி வைக்கப்பட்டிருந்த அட்டைப் பெட்டிகளில் ஏற்பட்ட தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். மேலும், இந்தச் சம்பவம் தொடா்பாக திலகா்திடல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

