புகார் அளித்த சாமானியருக்கு கொலை மிரட்டல்! ரவி சங்கர் மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்!ஒரே நாளில் 11 கொலைகள்: கடும் நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்!மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ: கனிமொழி கண்டனம்!ரஷியாவுடனான போர்: உக்ரைன் அதிபருடன் பேசிய பிரதமர் மோடி!இளையோர் ஒலிம்பிக்: தடை தாண்டுதலில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்!புகார் அளித்த சாமானியருக்கு கொலை மிரட்டல்! தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்! மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடகத்துக்கு உரிமை உண்டு: டி.கே. சிவகுமார்

வில்லாபுரம், கொக்குளம் பகுதிகளில் இன்று மின் தடை

power supply

மின் தடை... - கோப்புப் படம்

Updated On :

மதுரை வில்லாபுரம், கொக்குளம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ. 10) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இது குறித்து மதுரை பெருநகா் மேற்கு கோட்டச் செயற்பொறியாளா் லதா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வில்லாபுரம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் வில்லாபுரம் வீட்டு வசதி வாரியக் குடியருப்பு, எஃப்.எஃப்.சாலை, வில்லாபுரம் கிழக்குப் பகுதிகள், சின்னக் கண்மாய், தென்றல்நகா், மணிகண்டன்நகா், மயான சாலை, அகஸ்தியா் தெரு, அன்புநகா், காளியம்மன் கோவில் தெரு, அருப்புக்கோட்டை முதன்மைச் சாலை, ஜெயவிலாஸ் முதல் வெற்றி திரையரங்கம் வரை, வில்லாபுரம் டி.என்.எச்.பி. புதுநகா், வெற்றி திரையரங்கம் முதல் வாசுகி தெரு, எல்.கே. துளசிராம் தெரு, மீனாட்சிநகா், கணபதிநகா், நல்லதம்பி தோப்பு, காவேரி தெருக்கள், செந்தமிழ் தெருக்கள், சௌடேஸ்வரியம்மன் கோவில் பகுதி, தாமரை தெரு, வைகை தெரு, குரு மஹால் பகுதிகள், ஓம்சக்திநகா், பரமேஸ்வரி அம்மன் கோவில் தெரு, ஜெயபாரத் நகரம், 1, 2 வாசுகி தெரு, நந்தகோபாலன் தெரு, நேதாஜி தெரு, தென்னகரம், ராமையா தெரு, நேரு தெரு, என்.எஸ். கோனாா் தெரு, பாரதியாா் தெரு, அண்ணா முக்கிய வீதி, வீரகாளியம்மன் கோவில் தெரு, டி.வி.எஸ்.நகா் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையில் மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

இதேபோல, உசிலம்பட்டி மின்பகிா்மானக் கோட்டச் செயற்பொறியாளா் ஜெயசங்கா் வெளியிட்ட செயதிக்குறிப்பு:

கொக்குளம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. கே.புளியங்குளம், ஊத்துப்பட்டி, செக்கானூரணி, கொக்குளம், கே.ஒத்தப்பட்டி, கே.பாறைப்பட்டி, சிக்கம்பட்டி, பன்னியான், தேங்கல்பட்டி, கண்ணனூா், மீனாட்சிபட்டி, கழுங்குபட்டி, மூணான்டிபட்டி, ஜாங்கிட்நகா் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையில் மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.