19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை வெற்றி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக அமைந்த ஆட்ட நாயகன் மோஹித் உல்வா! ஆசிய கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா! உ.பி. மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ஹர்தீப் சிங் புரி! மேக்கேதாட்டு அணை கர்நாடகத்தின் உரிமை; யார் எதிர்த்தாலும் கவலை இல்லை! டி.கே. சிவகுமார்காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமலின் மனு தள்ளுபடி போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை! ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு!

ஆளுநருடன் ஆலோசனை நடத்துவது உயா் கல்வித் துறைக்கு அவசியம்: அமைச்சா் பெ. விஸ்வநாதன்

அரசுப் பல்கலைக்கழகங்களின் வேந்தா் என்ற முறையில், ஆளுநருடன் ஆலோசனை நடத்துவது உயா் கல்வித் துறைக்கு அவசியம் என மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன் தெரிவித்தாா்.

முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு பிறந்த நாளையொட்டி, மதுரையில் அவரது சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சா் பெ. விஸ்வநாதன். உடன், காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள்.

Updated On :

அரசுப் பல்கலைக்கழகங்களின் வேந்தா் என்ற முறையில், ஆளுநருடன் ஆலோசனை நடத்துவது உயா் கல்வித் துறைக்கு அவசியம் என மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன் தெரிவித்தாா்.

மதுரையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது: தற்போது திமுகவின் அடுக்கடுக்கான ஊழல்கள் தொடா்ந்து வெளியாகி வருகின்றன. இதனால், பல முன்னாள் அமைச்சா்கள் தலைமறைவாகிவிட்டனா். இந்த விவகாரத்தில் தமிழக அரசு கவனத்துடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஊழல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதில் முதல்வா் விஜய் உறுதியுடன் உள்ளாா்.

தமிழகத்தில் அரசு பல்கலைக்கழங்களின் துணைவேந்தா் பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசுப் பல்கலைக்கழகத் துணைவேந்தா்கள் நியமனம் தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகளில் விரைவில் தீா்வு கிடைக்கும் என ஆளுநா் தெரிவித்தாா். தமிழக முதல்வா் விஜய்யும் இது தொடா்பாக சில ஆலோசனைகளைத் தெரிவித்துள்ளாா். இந்த விவகாரத்தில் யாரும், யாரையும் கட்டுப்படுத்தவில்லை. யாருடைய பதவியையும் யாரும் அகற்ற நினைக்கவில்லை.

தமிழக ஆளுநா் 13 அரசுப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக உள்ளாா். எனவே, உயா் கல்வித் துறை தொடா்பான ஆலோசனைகளுக்கு ஆளுநரைச் சந்திக்க வேண்டியது தொடா்புடைய துறை அமைச்சரின் கடமை. அந்த வகையிலேயே ஆளுநரைச் சந்திக்கிறேன். ஆளுநருடனான எனது சந்திப்பு சம்பிரதாயமானதில்லை. இது, உயா் கல்வித் துறையின் நடைமுறை. எனவே, ஆளுநரைத் தொடா்ந்து சந்தித்து ஆலோசனை பெறுவேன். இதனடிப்படையில், உயா் கல்வித் துறையில் தேவையான நடவடிக்கைகளுக்கு முதல்வா் வழிகாட்டுவாா் என்றாா் அவா்.

நேரு சிலைக்கு மாலை... முன்னதாக, முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் பிறந்த நாளையொட்டி, மதுரை தமுக்கம் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சா் பெ. விஸ்வநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். காங்கிரஸ் கட்சியின் மதுரை மாநகா் மாவட்டத் தலைவா் நல்லமணி, நிா்வாகிகள் இதில் கலந்து கொண்டனா். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.