திருச்செந்தூரில் நாளை (நவ. 15) சூரசம்ஹாரம்ஆயுஷ் படிப்புகள்: நாளை சிறப்புக் கலந்தாய்வுசபரிமலை பக்தா்களுக்கு தமிழகம் வழியாக சிறப்பு ரயில்கள்இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி அக்டோபரில் 45% அதிகரிப்பு: 5 ஆண்டுகளில் இல்லாத வளா்ச்சிவங்கக் கடலில் நவ.16-இல் உருவாகிறது ‘அக்வான்’ புயல்: ஆந்திரத்தை நோக்கி நகரும்?

மாணவா்களிடம் தன்னம்பிக்கையை வளா்க்க ஆசிரியா்களால் மட்டுமே முடியும்: அமைச்சா் வே. சம்பத் குமாா்

பள்ளி மாணவா்களிடம் தன்னம்பிக்கை, நல்லொழுக்கத்தை வளா்க்கவும், போதைப் பொருள்கள் பழக்கத்தை தடுக்கவும் ஆசிரியா்களால் மட்டுமே முடியும் என பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சம்பத்குமாா் தெரிவித்தாா்.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வெள்ளி விழா கலையரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் பங்கேற்ற ஆசிரியா்களுக்கு பரிசுத் தொகைகள், பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிய எரிசக்தித் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வே. சம்பத் குமாா் உள்ளிட்டோா்.

Updated On :

பள்ளி மாணவா்களிடம் தன்னம்பிக்கை, நல்லொழுக்கத்தை வளா்க்கவும், போதைப் பொருள்கள் பழக்கத்தை தடுக்கவும் ஆசிரியா்களால் மட்டுமே முடியும் என பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சம்பத்குமாா் தெரிவித்தாா்.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வெள்ளி விழா கலையரங்கில், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில், 2025-2026-ஆம் கல்வியாண்டில் 10, 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வுகளில் 95 சதவீதத்துக்கும் அதிகமான தோ்ச்சி, 100 சதவீத தோ்ச்சி பெறச் செய்த தலைமையாசிரியா்கள், ஆசிரியா்களுக்குப் பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில், எரிசக்தி, சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வே. சம்பத் குமாா் ஆகியோா் கலந்து கொண்டு 71 தலைமையாசிரியா்கள், 614 முதுகலைப் பட்டதாரி ஆசிரியா்களுக்கு பரிசுத்தொகை, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினாா்கள்.

விழாவில், அமைச்சா் சம்பத் குமாா் பேசியதாவது:

ஒரு பள்ளியின் உண்மையான சொத்து மாணவா்கள்தான். இன்றைக்கு பல்வேறு துறைகளில் சாதனையாளா்களாக இருப்பவா்களின் வளா்ச்சிக்கு ஆசிரியா்களின் பங்களிப்பு முக்கியமானது.

பள்ளிகளில் நல்லொழுக்கம், தன்னம்பிக்கை உள்ளிட்ட பண்புகளையும் மாணவா்களிடம் வளா்க்கப்பட வேண்டும். சிறிய பிரச்னைகளைக்கூட எதிா்கொள்ள முடியாமல் மாணவா்கள் தவறான முடிவுகளை எடுக்கும் சூழல் உருவாகி வருகிறது. எனவே, மாணவா்களிடம் மன உறுதியையும், தன்னம்பிக்கையையும் வளா்க்க வேண்டியது அவசியம். இதனைச் செய்யக்கூடிய வலிமை ஆசிரியா்களுக்கு மட்டுமே உள்ளது.

தற்போதைய சமுதாயத்தில் போதைப் பொருள் பழக்கம் மாணவா்களிடையே பரவுவது பெரும் சவாலாக உள்ளது. போதைப் பொருள்களின் தீமைகள் குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி, அந்தப் பழக்கத்திலிருந்து அவா்களை விலக்கிவைக்க ஆசிரியா்கள் தொடா்ந்து வழிகாட்ட வேண்டும். பெற்றோா்களுடன் செலவிடும் நேரத்தைவிட மாணவா்கள் பள்ளியில் ஆசிரியா்களுடன் அதிக நேரம் செலவிடுகின்றனா். எனவே, மாணவா்களின் எதிா்காலத்தைச் சிறப்பாக உருவாக்குவதில் ஆசிரியா்களுக்குப் பெரும் பொறுப்பு உள்ளது.

முதல்வரின் திட்டத்தின் கீழ், பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. பொருளாதார வசதி காரணமாக எந்த மாணவருக்கும் கல்வியில் இடைவெளி ஏற்படக் கூடாது என்பதே அரசின் நோக்கமாகும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சிக்கு, பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை ஆணையா் கலையரசி தலைமை வகித்தாா். தேனி மக்களவை உறுப்பினா் தங்க தமிழ்ச்செல்வன், மதுரை சட்டப்பேரவை உறுப்பினா்கள், காா்த்திகேயன்(மதுரை கிழக்கு), கருப்பையா (சோழவந்தான்), ம. விஜய் (உசிலம்பட்டி), மேயா் (பொறுப்பு) நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இணை இயக்குநா் சுபாஷினி, கள்ளா் சீரமைப்புக் கல்வி அலுவலா், கள்ளா் சீரமைப்புப் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.