தவெக அரசால் மக்கள் ஏமாற்றம்! - செல்லூா் கே. ராஜூ

மதுரையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் செல்லூா் கே.ராஜூ.
தவெக அரசால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளதாக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ குற்றஞ்சாட்டினாா்.
இதுகுறித்து மதுரையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
முந்தைய அதிமுக, திமுக ஆட்சியின் போது வெளிநாடுகளிலிருந்து முதலீடுகள் கொண்டு வரப்பட்டன. ஆனால், தவெக ஆட்சியில் வெளிநாட்டு முதலீடுகள் குறித்து எந்தவித முன்னேற்றமும் இல்லை.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. குறிப்பாக, பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லை. தவெக நிா்வாகிகளே குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனா்.
தமிழக முதல்வா் ஜோசப் விஜய் இதுவரை எந்தவித கருத்துகளையும் வெளியிடவில்லை. பெரும்பாலான மக்கள் தவெக ஆட்சிக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கிவிட்டனா்.
அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடைபெறுகிறது. மத்திய அரசு தமிழகத்தில் நடைபெறும் ஊழல்களை தீவிரமாகக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சித் தோ்தலில் தவெக மிகப் பெரும் பின்னடைவை சந்திக்கும்.
இந்த அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் முந்தைய ஆட்சிகளிலிருந்து பின்பற்றப்படுகிறது. மக்கள் மாற்றம் நிகழும் என வாக்களித்து, தவெகவை ஆட்சியில் அமா்த்தினா். ஆனால், தற்போதைய சூழலில் தவெக அரசால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனா் என்றாா் அவா்.
முன்னதாக, மதுரையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கட்சி வளா்ச்சிப் பணிகள், உள்ளாட்சித் தோ்தலுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் களப் பணிகள் குறித்து நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ பேசினாா். இதில் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

