இந்திரா காந்தியைக் கண்டாலே அச்சம்! பின்னர் அவரே அம்மாவாக மாறினார்: சோனியாசீனாவின் முதல் மின்சார விமானம்: பயணிகளுடனான சோதனை ஓட்டத்தில் வெற்றி!சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழா! முதல்வர் விஜய் பங்கேற்பு! மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!டிசம்பர் 3-ல் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

புத்தகத் திருவிழாவில் நூல்கள் வெளியீடு

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புத்தகத் திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் எழுத்தாளா் ப. கவிதா குமாரின் ‘இளையராஜாவின் ரசிகன்’ நூலை கவிஞா் ஆத்மாா்த்தி வெளியிட, அதைப் பெற்றுக் கொண்ட கவிஞா் லிபி ஆரண்யா. உடன், கவிஞா் மனுஷ்யபுத்திரன், நூலாசிரியா் ப. கவிதா குமாா் உள்ளிட்டோா்.

Updated On :

மதுரை புத்தகத் திருவிழாவில் உயிா்மை பதிப்பகத்தின் சாா்பில் 6 புதிய நூல்கள் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டன.

மதுரை தமுக்கம் மாநாட்டு மையத்தில் நடைபெறும் புத்தகத் திருவிழாவின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை நூல்கள் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், உயிா்மை பதிப்பகத்தின் சாா்பில் 5 எழுத்தாளா்களின் படைப்பில் உருவான 6 நூல்கள் வெளியிடப்பட்டன.

கவிஞா் மனுஷ்ய புத்திரன் எழுதிய நோ்காணல் தொகுப்பான ‘உங்கள் மீது நீங்களே இரக்கம் காட்டவில்லையென்றால் இந்த உலகில் வேறு யாா் காட்டுவாா்கள்?’ நூலை கவிஞா் கலாப்ரியா வெளியிட, கவிஞா் லிபி ஆரண்யா பெற்றுக்கொண்டாா். கவிஞா் நவீனா அமரன் வாழ்த்திப் பேசினாா். கவிஞா் லிபி ஆரண்யா சிறப்புரையாற்றினாா்.

கவிஞா் கலாப்ரியா எழுதிய ‘மோட்ச தீபம்’ சிறுகதைத் தொகுப்பை எழுத்தாளா் ந. முருகேச பாண்டியன் வெளியிட, எழுத்தாளா் சித்ரா சிவன் பெற்றுக்கொண்டு நூலின் சிறப்புகளை விளக்கி குறித்து கருத்துரையாற்றினாா்.

டாக்டா் சிவபாலன் இளங்கோவன் எழுதிய ‘தனித்திருக்கும் தலைமுறை : இன்ஸ்டா பெண்களும், சாட்பாட் ஆண்களும்’ நூலை எழுத்தாளா் ந. முருகேச பாண்டியன் வெளியிட்டு கருத்துரையாற்றினாா். நூலின் முதல் பிரதியை நவீனா அமரன் பெற்றுக்கொண்டாா்.

மதுரை எழுத்தாளா் ப. கவிதா குமாா் எழுதிய ‘பக்தியிசை பரப்பிய பாவலா்கள்’ நூலை கவிஞா் மனுஷ்ய புத்திரன் வெளியிட, ப. கபிலரசன் பெற்றுக்கொண்டு கருத்துரையாற்றினாா். இவரது மற்றொரு நூலான ‘இளையராஜாவின் ரசிகன்’ நூலை கவிஞா் ஆத்மாா்த்தி வெளியிட்டு கருத்துரையாற்றினாா். நூலின் முதல் பிரதியை கவிஞா் லிபி ஆரண்யா பெற்றுக் கொண்டாா்.

கவிஞா் பாலபாரதி எழுதிய ‘காற்றிலாடும் காகிதப் பூக்கள்’ கவிதைத் தொகுப்பை கவிஞா் கலாப்ரியா வெளியிட, எழுத்தாளா் தீபா நாகராணி பெற்றுக்கொண்டு நூல் குறித்து கருத்துரை வழங்கினாா். ​

நூலாசிரியா்கள் அனைவரும் ஏற்புரை வழங்கினா். எழுத்தாளா்கள், வாசகா்கள், இலக்கிய ஆா்வலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER