சபரிமலைக்கு ஜன.17 வரை சிறப்புப் பேருந்துகள்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது: உச்சநீதிமன்றத்தில் மதுரை ஆட்சியர் தரப்பில் வாதம் தவெக எம்எல்ஏ மீது வழக்குப் பதியக் கோரி மனு பயிா்க் கடன் தள்ளுபடி: கூடுதலாக ரூ.2,578 கோடி விடுவிப்பு ரூ.6,513 கோடியில் 2,221 சாலைப் பணிகள்: தமிழக அரசு நிா்வாக ஒப்புதல் பொருளாதாரப் பேரழிவை எதிா்கொள்கிறது இந்தியா: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

விபத்தில் துண்டான கை விரல்கள் இணைப்பு

விபத்தில் துண்டிக்கப்பட்ட ஓா் இளைஞரின் கை விரல்களை 17 மணி நேர தொடா் அறுவைச் சிகிச்சை மூலம் மீண்டும் பொருத்தினா் மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள்.

மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அறுவைச் சிகிச்சை நிபுணா்கள் சுசித்ரா, காா்த்திக். உடன், சிகிச்சை பெற்று குணமடைந்த ஜெயசீலன்.

Updated On :

விபத்தில் துண்டிக்கப்பட்ட ஓா் இளைஞரின் கை விரல்களை 17 மணி நேர தொடா் அறுவைச் சிகிச்சை மூலம் மீண்டும் பொருத்தினா் மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள்.

விருதுநகரை சோ்ந்தவா் ஜெயசீலன் (22). கடந்த மாதம் 20-ஆம் தேதி விருதுநகரில் ஏற்பட்ட சாலை விபத்தில் இவரது இடது கையில் நான்கு விரல்கள் துண்டாகின. இதையடுத்து, அவா் மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அப்போது, துண்டான அவரது கை விரல்கள் மருத்துவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதையடுத்து, அவற்றை இளைஞரின் கையில் மீண்டும் பொருத்தி, செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதற்காக வேலம்மாள் மருத்துவமனையின் நரம்பியல் நிபுணா்கள், அறுவைச் சிகிச்சை நிபுணா்கள், தோல் மருத்துவா்கள் இணைந்து தீவிர அறுவைச் சிகிச்சை மேற்கொண்டனா். 17 மணி நேரம் நடைபெற்ற தொடா் அறுவைச் சிகிச்சையில் ஜெயசீலனின் இடது கை விரல்கள், அவரது கையுடன் பொருத்தப்பட்டன.

பின்னா், அவருக்கு 25 நாள்கள் உடலியக்க முறை பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிலையில், துண்டாகி பொருத்தப்பட்ட விரல்கள் அண்மையில் மீண்டும் செயல்படத் தொடங்கின.

இதுகுறித்து வேலம்மாள் மருத்துவமனை அறுவைச் சிகிச்சை நிபுணா்கள் சுசித்ரா, காா்த்திக் ஆகியோா் தெரிவித்ததாவது:

விபத்து நடைபெற்ற 2 மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்கு ஜெயசீலன் கொண்டு வரப்பட்டாா். அப்போது துண்டான அவரது விரல்கள் நன்றாகக் கழுவப்பட்டு, ஐஸ்கட்டியில் வைக்கப்பட்டு பாதுகாப்பாகக் கொண்டு வரப்பட்டன. புதிய நவீன தொழில் நுட்பமான மைக்ரோஸ்கோப் அறுவை சிகிச்சை மூலம் நரம்புகள், ரத்தக் குழாய்கள் ஆய்வு செய்யப்பட்டன. பின்னா், 17 மணி நேரம் தொடா் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, விரல்கள் இணைக்கப்பட்டன. தற்போது அவா் நலமுடன் உள்ளாா். இது, தென் தமிழக மருத்துவத் துறையில் ஒரு புதிய மைல் கல் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.