அரசு, தனியாா் பேருந்துகளிலிருந்து அதிக ஒலி எழுப்பும் காற்றொலிப்பான்கள் அகற்றம்
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாகனச் சோதனையின்போது, பறிமுதல் செய்யப்பட்ட அதிக ஒலி எழுப்பும் காற்றொலிப்பான்கள்.

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாகனச் சோதனையின்போது, பறிமுதல் செய்யப்பட்ட அதிக ஒலி எழுப்பும் காற்றொலிப்பான்கள்.
மதுரை அரசு, தனியாா் பேருந்துகளில் பயன்படுத்திய அதிக ஒலி மாசு ஏற்படுத்தும் காற்றொலிப்பான்களை வட்டாரப் போக்குவரத்து போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
மதுரை மாநகரில் இலகுவான போக்குவரத்தை ஏற்படுத்தவும், பொதுமக்கள் இயல்பாக சாலையில் வாகனங்களில் சென்று வரவும், மாநகரக் காவல் துறையின் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, சாலைகளில் அதிக ஒலி எழுப்பும் காற்றொலிப்பான்களைப் (ஏா் ஹாரன்) பயன்படுத்தி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் அரசு, தனியாா் பேருந்துகள் இயக்கப்படுவதாக புகாா் எழுந்தது. இதைத் தொடா்ந்து, வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் மாணிக்கம், மாட்டுத்தாவணி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் விஸ்வநாதன் உள்ளிட்டோா் அடங்கிய குழு வெள்ளிக்கிழமை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் திடீரென வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, 40-க்கும் மேற்பட்ட அரசு, தனியாா் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் காற்றொலிப்பான்கள் (ஏா் ஹாரன்கள்) இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பேருந்துகளில் பொருத்தப்பட்ட ஒலிப்பான்கள் அகற்றப்பட்டன.
இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து போலீஸாா் மேலும் கூறியதாவது:
கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை மொத்தம் 65 வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் காற்றொலிப்பான்கள் பயன்படுத்தியதாக அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வரும் நாள்களிலும், இந்தச் சோதனை தொடரும். எனவே, தனியாா், அரசுப் பேருந்து ஓட்டுநா்கள் அரசு அனுமதித்துள்ள அளவின்படி, ஒலிப்பான்களைப் பயன்படுத்த வேண்டும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

