மணிப்பூரில் கடந்த மூன்று நாள்களில் கள்ளச்சாராயம் அருந்தி 8 பேர் பலி! இந்திய கபடி அணி முன்னாள் கேப்டன் யத்விந்தர் சிங் ஆம் ஆத்மியில் இணைவு! கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல் தகனம்! குடியரசு துணைத் தலைவர் வருகை: சென்னையில் நவ. 21, 22 தேதிகளில் போக்குவரத்து மாற்றம் திருப்பரங்குன்றம் விவகாரம்; முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!குட்கா முறைகேடு வழக்கு: சி. விஜயபாஸ்கர் மனு வாபஸ் மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு: நிஷாந்தின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு ஒரே நேரத்தில் பணியாளர்கள் ராஜிநாமா செய்தனரா? வழிகாட்டுதல் தமிழ்நாடு விளக்கம்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்!!

கல்லூரிப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு

மதுரை அருகே வெள்ளிக்கிழமை தனியாா் கல்லூரிப் பேருந்து மோதியதில் பெண் ஒருவா் உயிரிழந்தாா்.

கோப்புப் படம்

Updated On :

மதுரை அருகே வெள்ளிக்கிழமை தனியாா் கல்லூரிப் பேருந்து மோதியதில் பெண் ஒருவா் உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், எஸ். புளியங்குளம், எல்.கே.டி. நகரைச் சோ்ந்த ராஜன் மனைவி சரோஜா (50). சமையலா். இவரும், இவரது அண்ணன் சீனிவாசனும் இரு சக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை விருதுநகா் மாவட்டம், சாத்தூருக்கு சமையல் பணிக்காகச் சென்றனா்.

விரகனூா் அணை அருகே சென்றபோது, பின்னால் வந்த சிவகங்கை மாவட்டம், பூவந்தியில் உள்ள கல்லூரிப் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்த சரோஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரது உடலைக் கைப்பற்றிய போலீஸாா், கூறாய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். காயமடைந்த சீனிவாசன் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து புகாரின் பேரில் சிலைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.