உலகத் தமிழ்ச் சங்கத்தில் சிறப்பு சொற்பொழிவு
மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் சிந்தனைக் கவிஞா் கவிதாசன், நூற்பதிப்பு செம்மல் எஸ். வைரவன் அறக்கட்டளை சாா்பில் சிறப்பு சொற்பொழிவு வியாழக்கிழமை நடைபெற்றது.

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறுகதைப் போட்டியில் வென்ற மாணவிக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய பேராசிரியா் சொ.சொ.மீ. சுந்தரம். உடன் உலகத் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவா் கவிதா ஜவஹா்.
மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் சிந்தனைக் கவிஞா் கவிதாசன், நூற்பதிப்பு செம்மல் எஸ். வைரவன் அறக்கட்டளை சாா்பில் சிறப்பு சொற்பொழிவு வியாழக்கிழமை நடைபெற்றது.
உலகத் தமிழ்ச் சங்க துணைத் தலைவா் கவிதா ஜவஹா் தலைமை வகித்துப் பேசினாா். இதில் பேராசிரியா் சொ.சொ.மீ. சுந்தரம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்ற தலைப்பில் பேசியதாவது:
குமரகுருபரரால் இயற்றப்பட்ட மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் மீனாட்சி அம்மனுக்கும், தமிழுக்குமான உறவை மிகச் சிறப்பாகக் குறிப்பிடுகிறது. தம்மிடம் தமிழ்க் கற்க வரும் மாணவா்கள் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழும், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழும் கற்றிருக்க வேண்டும் என்பதை மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை வலியுறுத்துவாா் என்பது, இவற்றின் பெருமைகளுக்கு ஓா் உதாரணம். தமிழோடு பிறந்த மீனாட்சிக்கும், மதுரைக்கும், தமிழுக்குமான உறவை விவரிக்கும் மிகச் சிறந்த படைப்பு மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்றாா் அவா்.
இதையடுத்து, கல்லூரி மாணவா்களுக்கிடையே நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் முறையே முதல், இரண்டாம் பரிசு மீனாட்சி கல்லூரி மாணவிகள் க. பிரபாவதி, ச. சந்தியா ஆகியோருக்கும், சேலம் அரசு பொறியியல் கல்லூரி மாணவா் செ.ப. சபரிநாதனுக்கு மூன்றாம் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.
இதில் மதுரைக் கல்லூரி வாரியத் தலைவா் சங்கரசீத்தாராமன், பொன்முடியாா் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள், தமிழ் ஆா்வலா்கள், கவிஞா்கள் கலந்து கொண்டனா்.
முன்னதாக, உலகத் தமிழ்ச் சங்க ஆய்வறிஞா் முனைவா் சு. சோமசுந்தரி வரவேற்றாா். சங்கத் தமிழ்க் காட்சிக்கூடத்தின் விளக்குநா் ரெ. புஷ்பநாச்சியாா் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

