மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவராக கவிதா ஜவஹா் நியமனம்

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவராக பட்டிமன்றப் பேச்சாளா் கவிதா ஜவஹா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

கவிதா ஜவஹா்.

Updated On :

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவராக பட்டிமன்றப் பேச்சாளா் கவிதா ஜவஹா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தமிழகத்தின் தமிழ் மொழி மற்றும் பண்பாட்டை வளா்க்கும் நோக்கில் செயல்பட்டு வரும் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவராக பட்டிமன்றப் பேச்சாளா் கவிதா ஜவஹரை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

உலகத் தமிழா்களை ஒருங்கிணைத்தல், உலகம் முழுவதும் உள்ள புலம்பெயா் தமிழ் அமைப்புகள், சங்கங்கள் மற்றும் தமிழ் ஆய்வறிஞா்களை ஒரே குடையின் கீழ் இணைத்தல், பயிலரங்குகள் மற்றும் மாநாடுகளை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட பணிகள் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவரின் கீழ் வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் ச.ஜோசப் விஜய்யை  கவிதா ஜவஹா்  புதன்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.