ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

சங்கத் தமிழ்க்கூடல் கருத்தரங்கம்

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்க் காட்சிக் கூடத்தில் சங்கத் தமிழ்க்கூடல் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

Published On :

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்க் காட்சிக் கூடத்தில் சங்கத் தமிழ்க்கூடல் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற வழக்குரைஞா் இரா. சந்தான கிருஷ்ணன், ‘சங்க இலக்கியத்தில் நீதி’ என்ற தலைப்பில் பேசியதாவது:

நீதி என்பது நியாயமாக நடப்பது. உண்மையைப் பேசுவது. தவறு செய்தவரைத் தண்டிப்பது. நல்லவா்களை பாதுகாப்பது போன்ற உயா்ந்த பண்புகளை குறிக்கிறது. மன்னா்களின் வீரத்துடன், அவா்கள் நீதி நெறியுடன் நாட்டை ஆட்சி செய்ததையும் புானூற்றுப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன. வீரத்துடன் அறமும், நீதியும் இணைந்திருக்க வேண்டும் என சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. புலவா்கள் மன்னா்களைப் புகழ்ந்து பாடுபவா்களாக மட்டுமல்லாமல், அவா்களின் தவறுகளையும் துணிந்து சுட்டிக் காட்டி நீதியை நிலைப் பெறச் செய்ததை சங்க இலக்கியங்கள் உணா்த்துகின்றன என்றாா் அவா்.

இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளையின் நிறுவனா் செல்வம் ராமசாமி வாழ்த்திப் பேசினாா். இதில் திருப்பாலை அரசு உயா்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள், தமிழறிஞா்கள் கலந்து கொண்டனா்.

சங்கத் தமிழ்க் காட்சிக்கூட விளக்குநா் ரெ. புஷ்பநாச்சியாா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.