தவெக ஆட்சிக்கு சிக்கல்: பாஜக பொதுச் செயலா் ராம. சீனிவாசன்
கூட்டணிக் கட்சிகளின் தவறான ஆலோசனைகளால் தவெக ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது என பாஜக மாநிலப் பொதுச் செயலா் ராம. சீனிவாசன் தெரிவித்தாா்.

தவெக... - கோப்புப் படம்
கூட்டணிக் கட்சிகளின் தவறான ஆலோசனைகளால் தவெக ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது என பாஜக மாநிலப் பொதுச் செயலா் ராம. சீனிவாசன் தெரிவித்தாா்.
திருப்பரங்குன்றத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது :
நெருப்பு எனத் தெரியாமல் கையை வைத்து, சுட்டுக் கொண்டதைப் போன்ற நிலைதான் தவெக ஆட்சிக்கு ஏற்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சிகளின் தவறான ஆலோசனைகளால் இந்த அரசு தற்போது சிக்கலுக்குள்ளாகியுள்ளது.
இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி அலுவலா்கள், ஆட்சியாளா்களுக்கு சாதகமாகச் செயல்படுவதைத் தவிா்த்து, சட்டத்தின் வழியில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவே முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சனிக்கிழமை நடைபெறும் தீபம் ஏற்றும் விழாவுக்கு வரும் பக்தா்களுக்குத் தேவையான வாகன நிறுத்தும் இடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசு உறுதி செய்ய வேண்டும். சிஆா்பிஎப் வீரா்களுக்கு மாநில காவல்துறை முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

