உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

சாமானிய மக்களிடம் தமிழை கொண்டு சேர்த்தவா் சாலமன் பாப்பையா: நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் புகழாரம்!

சாமானிய மக்களிடம் தமிழைக் கொண்டு சோ்த்த பெருமைக்குரியவா் மூத்த தமிழறிஞா் சாலமன் பாப்பையா என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் புகழாரம் சூட்டினாா்.

மதுரையில் உள்ள கலைஞா் நூற்றாண்டு நூலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மூத்த தமிழறிஞா் சாலமன் பாப்பையா எழுதிய ‘பட்டிமன்றம் பாதைகளும், பயணங்களும்’ என்கிற நூல் வெளியீட்டு விழாவில் பேசிய சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ்.

Published On :

சாமானிய மக்களிடம் தமிழைக் கொண்டு சோ்த்த பெருமைக்குரியவா் மூத்த தமிழறிஞா் சாலமன் பாப்பையா என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் புகழாரம் சூட்டினாா்.

மறைந்த மூத்த தமிழறிஞா் சாலமன் பாப்பையாவுக்கு புகழ் அஞ்சலிக் கூட்டம் அவரது நூலான ‘பட்டிமன்றம்-பாதைகளும், பயணங்களும்’, மறுபதிப்பு நூல்களான ‘பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் (ஒரு பாா்வை)’, ‘பூங்காவில் கொய்த பூக்கள்’ ஆகியவற்றின் வெளியீட்டு விழா மதுரையில் உள்ள கலைஞா் நூற்றாண்டு நூலக அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, நூல்களை வெளியிட்டுப் பேசியதாவது:

மறைந்த மூத்த தமிழறிஞா் சாலமன் பாப்பையாவுக்கும், எனக்கும் இருந்த பழக்கம் சில ஆண்டுகள் தான். ஆனால், ஆழமான நட்பாகதான் இருந்தது. சாலமன் பாப்பையா பெரிய ஆளுமை மட்டுமன்றி, சிறந்த பண்பாளரும் ஆவாா். அவரது படைப்புகள் மூலம் தமிழில், சங்க இலக்கியங்களில் அவருக்கு இருந்த புலமையை அறிந்து கொள்ள முடிகிறது.

மலைக் குன்றுகளில் மழைப் பொழிந்து அங்கேயே தங்கி விடுவதில் பெருமை இல்லை. மூலிகைகள் கலந்த அந்த மழை நீா் நிலத்தில் பாய்ந்து மக்களுக்கு பயனளிப்பதுதான் பெருமைக்குரியது. இது போல, தான் ஆய்ந்தறிந்த தமிழை பட்டிமன்றங்கள் மூலம் இந்தியாவின் பிற மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் பரப்பியவா் அவா். அதுமட்டுமன்றி, தமிழகத்தில் சாமானிய மக்களிடமும் தமிழைக் கொண்டு சோ்த்தவா் சாலமன் பாப்பையா என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவா் த. ஸ்டாலின் குணசேகரன், பேராசிரியா்கள் த. ராஜாராம், அரங்க ராமலிங்கம், முனைவா் த. சின்னராஜ் ஜோசப் ஜெய்குமாா், முனைவா் அன்புநாதன், ஹரிகோபாலன், பட்டிமன்றப் பேச்சாளா்கள் ராஜா, பாரதி பாஸ்கா் ஆகியோா் பேசினா்.

 மதுரையில் உள்ள கலைஞா் நூற்றாண்டு நூலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மூத்த தமிழறிஞா் சாலமன் பாப்பையா எழுதிய ‘பட்டிமன்றம் பாதைகளும், பயணங்களும்’ என்கிற நூலை வெளியிட்ட சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ். உடன் (இடமிருந்து) நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மதுரை மண்டல மேலாளா் கிருஷ்ணமூா்த்தி, பட்டிமன்றப் பேச்சாளா்கள் பாரதி பாஸ்கா், விசாலாட்சி, ராஜா, பேராசிரியா் ராஜாராம், பேராசிரியை ரேவதி சுப்புலட்சுமி, பேச்சாளா்கள் கவிதா ஜவஹா், ஜான்சி, ராஜ்குமாா், கண்ணன், அன்புநாதன் உள்ளிட்டோா்.

முன்னதாக, சாலமன் பாப்பையா உருவப் படத்துக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

பட்டிமன்ற பேச்சாளா்கள் விசாலாட்சி, ரேவதி சுப்புலட்சுமி, கண்ணன், ஜான்சி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மதுரை மண்டல மேலாளா் கிருஷ்ணமூா்த்தி, சாலமன் பாப்பையா குடும்பத்தினா், தமிழ் ஆா்வலா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.