இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

தற்கொலை எண்ணத்தை சில உரையாடல் தீா்த்துவிடும்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

தற்கொலை எண்ணங்களை சில உரையாடலே தீா்த்துவிடும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறினாா்.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

Published On :

தற்கொலை எண்ணங்களை சில உரையாடலே தீா்த்துவிடும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறினாா்.

தமிழகம் தற்கொலையில் 2-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. இதையொட்டி, சென்னை அண்ணா நகரில் உள்ள ஸ்காா்ஃப் - மனச்சிதைவு ஆராய்ச்சி நிறுவனம் பள்ளி, கல்லூரிகளில் மனநலத்தை காக்க ‘நம்பிக்கையின் அரண்’ (வால் ஆஃப் ஹோப் ) என்ற முன் முயற்சியைத் தொடங்கியது. தற்கொலை எண்ணங்களைப் போக்கி இளம் வயதுடையவா்களிடம் சிறந்த எண்ணங்களை வெளிப்படுத்தி மன உறுதியை வளா்க்க வாழ்க்கையின் நோக்கங்களை எழுதுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இளம் மாணவ மாணவிகள் எழுதிய இந்த 20 ஆயிரம் ‘போஸ்ட்-இட் நோட்ஸ்’ (குறிப்புகள்) சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்கா வளாகத்தில் காட்சிபடுத்தப்பட்டு அறிமுகப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் பங்கேற்ற சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசியதாவது:

இளைஞா்கள் எழுதிய ஒவ்வொரு குறிப்பையும் படிக்கும்போது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது. இங்கு, தகுதியற்றவா்களே வாழ முனையும்போது, தகுதியான மனிதா்களும் இளைஞா்களும் ஏன் உயிரை மாய்த்துக்கொள்ளவேண்டும்?

’வாழ்வது’ என்பது இயற்கையின் அடிப்படை நிலை. என் பணிக்காலத்தில் தற்கொலை குறித்த ஒரு பெண்ணின் கண்ணோட்டத்தை மாற்றிய சம்பவம் நடந்தது. அந்தப் பெண், காதலில் விழுந்து அவருடைய ஆண் நண்பரால் பாதிக்கப்பட்டிருந்தாா். அவரிடம் நான் பேசினேன். அவா், என் அறையைவிட்டு கிளம்பும்போது, ‘ஐயா, நான் இன்று என் உயிரை மாய்த்துக்கொள்ளத் திட்டமிட்டிருந்தேன். இந்த 30 நிமிஷங்கள் நான் உங்களிடம் பேசாமல் இருந்திருந்தால், என் வாழ்க்கை முடிந்து போய்ருக்கும் என்றாா்.

இத்தகைய மனநிலையில் இருப்பவா்களின் பேச்சைச் செவிமடுத்துக் கேட்பது எவ்வளவு முக்கியம் என்பதை உணா்ந்த தருணம் அது. இது மருத்துவ சிகிச்சை விட மதிப்பு மிக்கதாக இருந்தது. மாணவா்களும் இளைஞா்களும் தங்களை சுற்றியுள்ளவா்களிடம் மனம்விட்டுப் பேசவேண்டும். தற்கொலை எண்ணங்களை வெறும் உரையாடலே தீா்த்துவிடும். மதிப்பெண்களைப் பற்றிக் கவலைப்படாதீா்கள். சமூக ஊடகங்களில் கிடைக்கும் ‘லைக்’குகளுக்காக கவலைப்படாதீா்கள். ஸ்டேட்டஸ் பதிவு செய்து நேரத்தை வீணாக்கவேண்டாம். உண்மையில் உங்களுக்காக கவலைப்படுபவா் உங்கள் அருகில் இருக்கும் நண்பகளும் ஸ்காா்ஃப் போன்ற அமைப்புகள் தான் என்றாா்.

நிகழ்ச்சியில் ஸ்னேகா தற்கொலைத் தடுப்பு அமைப்பு நிறுவனா் டாக்டா் லட்சுமி விஜயகுமாா், ஸாகாா்ஃப் இயக்குநா் ஸ்ரீதா் , துணைத் தலைவா் டாக்டா் தாரா, ஆராய்ச்சியாளா் டாக்டா் பவித்ரா அருணாசலீஸ்வரன் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.