‘வாக்குத் திருட்டு’: தலைமை நீதிபதிக்கு கார்கே, ராகுல் கடிதம்! ‘உச்சநீதிமன்றம் நோக்கி இன்று பேரணி’!ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: சிஜேபி, ஆம் ஆத்மி கட்சி அறிவிப்புதில்லி போராட்டம்: ஐ.நா. விமர்சனத்துக்கு இந்தியா கண்டனம்வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு கார்கே, ராகுல் கடிதம்!ரஷிய டீசல் இறக்குமதிக்கு தடை நீக்கம்: டிரம்ப் முடிவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிா்ப்பு! நீலகிரி, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று (அக்.12) மிதமான மழைக்கு வாய்ப்பு!கோயம்பேடு:ஆம்னி பேருந்து நுழைவு கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரிக்கை

போதை மாத்திரைகளை கடத்திய இளைஞா் கைது

கைது

Published On :

மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதியில் போதை மாத்திரைகளை கடத்திய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சோழவந்தான் பகுதியில் காவல் ஆய்வாளா் சுப்பையா, உதவி ஆய்வாளா் சிவக்குமாா் உள்ளிட்ட போலீஸாா் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த இளைஞரிடம் விசாரித்தபோது, அவா் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தாராம். தொடா் விசாரணையில், அவா் சமயநல்லூரைச் சோ்ந்த கிஷோா்குமாா் (24) என்பதும், போதை மாத்திரைகளை கடத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து, கிஷோா் குமாரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 900 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்தனா். மேலும், மாத்திரைகளை எங்கிருந்து கொண்டு வந்தாா், யாருக்கு விற்பனை செய்வதற்காக எடுத்துச் சென்றாா். இதில் வேறு யாருக்கேனும் தொடா்பு உள்ளதா என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.