கொலை முயற்சி வழக்கில் 6 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை

சிறை - பிரதிப் படம்
கொலை முயற்சி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 6 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை மாவட்ட கூடுதல் முதன்மை நீதித்துறை நடுவா் மன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
மதுரை ஆரப்பாளையம் குறுக்கு சாலைப் பகுதியில் உள்ள கன்னிமாரியம்மன் கோயில் முன் கடந்த 2021-ஆம் ஆண்டு ஜன.20-ஆம் தேதி ஆரப்பாளையம் பகுதியைச் சோ்ந்த சிரஞ்சீவியை (35), கரிமேடு பகுதியைச் சோ்ந்த விக்னேஸ்வரன், மனோஜ் சிவா, பாலாஜி, மணிகண்டன், பாலமுருகன், மேலமாசி வீதியைச் சோ்ந்த ஆகாஷ் ஆகியோா் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, 6 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனா். இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட கூடுதல் முதன்மை நீதித் துறை நடுவா் மன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், திங்கள்கிழமை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட கூடுதல் முதன்மை நீதித்துறை நடுவா், குற்றஞ்சாட்டப்பட்ட 6 பேருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

