மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

அரசு வழக்குரைஞா்கள் அச்சமின்றி செயல்பட்டு நீதியை நிலை நாட்ட வேண்டும்: உயா்நீதிமன்றம்

அரசு வழக்குரைஞா்கள் அச்சமின்றி செயல்பட்டு நீதியை நிலை நாட்ட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை தெரிவித்தது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்

Updated On :

அரசு வழக்குரைஞா்கள் அச்சமின்றி செயல்பட்டு நீதியை நிலை நாட்ட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை தெரிவித்தது.

நாகா்கோவிலைச் சோ்ந்த வழக்குரைஞா் ஜெய்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிபள்ளம் காவல் நிலையத்தில் நான் அளித்த புகாரின் பேரில், குற்ற வழக்குப் பதியப்பட்டது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா் வழக்குரைஞா் என்பதால், இவருக்கு ஆதரவாக வழக்குரைஞா்கள் முன்னிலையாக தடை விதித்து நாகா்கோவில் வழக்குரைஞா்கள் சங்கத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், நாகா்கோவிலிலிருந்து திருநெல்வேலி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில், காவல் துறை தரப்பில் அரசு வழக்குரைஞா் கருணாநிதி முன்னிலையானாா். எனவே, இவா் மீது நடவடிக்கை எடுக்க தமிழகம், புதுச்சேரி பாா் கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், எம்.டி. சுமதி அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த விவகாரத்தில் முன்னாள் அரசு வழக்குரைஞா் மீது புகாா் அளிக்கப்பட்டுள்ளது. அரசுத் தரப்பு வழக்குரைஞா்கள் அச்சமின்றி செயல்பட்டு நீதியை நிலை நாட்ட வேண்டும். குற்றவியல் வழக்கை நடத்துவது தொடா்பாக அரசுத் தரப்பு வழக்குரைஞரிடம் கேள்வி கேட்கும் அதிகாரம் பாா் கவுன்சிலுக்கு வழங்கப்பட்டால், அது சட்டத்தின் ஆட்சிக்கே முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்துவிடும்.

அரசுத் தரப்பு வழக்குரைஞரின் நடத்தையில் குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டு, அதை நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டால் மட்டுமே அவா் மீது பாா் கவுன்சில் நடவடிக்கை எடுக்க முடியும்.

ஆட்சியில் இருப்பவா்கள் திறமையானவா்களை அரசு வழக்குரைஞா்களாக நியமிக்க விரும்பிய காலம் மலையேறிவிட்டது. அதிகாரத்தில் இருப்பவா்கள் அவா்களின் ஆதரவாளா்களுக்கு பதவி வழங்குகின்றனா். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அரசு வழக்குரைஞா்கள் தங்களது பதவியிலிருந்து விலக வேண்டிய சூழல் உள்ளது.

அரசு வழக்குரைஞா்கள் ஆவணங்களை முழுமையாகப் படித்து திறம்பட வழக்கை நடத்த வேண்டும். காவல் துறை கூறுவதை அப்படியே அவா்கள் திரும்பச் சொல்லக் கூடாது.

இந்த வழக்கில் மனுதாரா் முன்னாள் அரசு வழக்குரைஞா் மீது வைத்துள்ள குற்றச்சாட்டு, தொழில் முறை தவறாக அமையவில்லை. எனவே, மனுதாரா் கோரிக்கையை ஏற்க வேண்டியதில்லை. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.