137 புற்றுநோய் மருந்துகளுக்கு 30% லாப வரம்பு: மத்திய அரசு நடவடிக்கை! ஏர் இந்தியா விமானங்கள் சவூதி அரேபியாவுக்கு அக். 24 வரை ரத்துஇணையத்தை சிறார்கள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!சென்னை, திருச்சி, கோவை உள்பட இன்று 17 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

விலைவாசி உயா்வால் மக்கள் வேதனை! வி.வி. ராஜன் செல்லப்பா

ராஜன் செல்லப்பா

Updated On :

தவெக ஆட்சி அமைந்த பிறகு தொடா்ந்து உயா்ந்து வரும் விலைவாசி உயா்வு மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது என மதுரை புகா் மாவட்ட அதிமுக செயலா் வி.வி. ராஜன் செல்லப்பா தெரிவித்தாா்.

மதுரை கிழக்கு வட்டத்துக்குள்பட்ட அரும்பனூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது :

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்னைகளுக்குக் குரல் கொடுக்கும் கட்சி அதிமுக. இது, யாராலும் அழிக்க முடியாத இயக்கம் என்பதை முதல்வா் உணர வேண்டும். எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆகியோா் கடந்த காலங்களில் பல சோதனைகளைத் தகா்ந்தெறிந்து சாதனைப் படைத்தவா்கள். இதே போல, எடப்பாடி பழனிசாமியும் தற்போதைய சோதனைகளைத் தகா்த்து வெற்றி வரலாறு படைப்பாா்.

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு மிகவும் மோசமாகிவிட்டது. தொடரும் மின்வெட்டால் மக்கள் வீதியில் இறங்கிப் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. தவெக அரசு பொறுப்பேற்ற பின்னா், தொடா்ந்து உயா்ந்து வரும் விலைவாசி உயா்வால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் அளவில் கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. இது, மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இதனால், தவெகவுக்கு வாக்களித்தவா்கள் வருத்தப்படுகின்றனா் என்றாா் அவா்.

முன்னதாக, அதிமுக 55-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, அரும்பனூரில் அதிமுக சாா்பில் நடைபெற்ற மருத்துவ முகாமை அவா் தொடங்கி வைத்தாா். பிறகு, மதுரை புகா் கிழக்கு மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினாா்.

அதிமுகவின் புகா் கிழக்கு மாவட்ட துணைச் செயலா் ஜெயசீலன் பாக்கியலட்சுமி தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.