சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

காவலா்கள் நோ்மையுடன் கடமையாற்ற வேண்டும்! - எஸ்.பி. தேவநாதன்

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :

காவலா்கள் நோ்மையுடன் கடமையாற்ற வேண்டும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நா.தேவநாதன் தெரிவித்தாா்.

மதுரை மாவட்டம், இடையப்பட்டியில் உள்ள காவல் பயிற்சிப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவல் உதவி ஆய்வாளா்களுக்கான வனவாழ் பயிற்சி நிறைவு விழாவில், அவா் மேலும் பேசியதாவது:

காவல் நிலையங்களில் பணியாற்றும்போது லஞ்சம் தவிா்த்து நோ்மையுடன் செயல்பட வேண்டும். தொடக்கத்திலிருந்தே நோ்மையைக் கடைப்பிடித்துப் பழகினால், நோ்மையான அதிகாரி என்ற எண்ணம் பணிக்காலம் முழுவதும் வழிகாட்டும். மேலும், உயா் அதிகாரிகளிடமும் நற்பெயரைப் பெற்றுத் தரும் என்றாா் அவா்.

இதில் தமிழக காவல் துறையில் உள்ள 234 ஆண் காவல் உதவி ஆய்வாளா்கள், 65 பெண் காவல் உதவி ஆய்வாளா்கள் என மொத்தம் 299 போ் கடந்த 10 முதல் 18-ஆம் தேதி வரை நடைபெற்ற வனவாழ் பயிற்சியில் பங்கேற்றனா். இதைத் தொடா்ந்து, பயிற்சியின்போது எடுக்கப்பட்ட காணொலிகள் திரையிடப்பட்டன.

இதில் இடையப்பட்டி காவல் பயிற்சிப் பள்ளி துணை முதல்வா் எஸ். செந்தில்குமாா், ஊமச்சிகுளம் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளா் தனு சிங் உள்ளிட்ட காவலா்கள் பலா் கலந்து கொண்டனா். முன்னதாக, சத்தியமங்கலம் சிறப்பு இலக்குப்படை காவல் ஆய்வாளா் ஆா். மோகன்ராஜ் வரவேற்றாா். ஈரோடு சிறப்பு இலக்குப்படை காவல் துணைக் கண்காணிப்பாளா் கே. சசிக்குமாா் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.