கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

சட்ட விரோதக் காவலில் பெண்: எஸ்.பி. அலுவலக சிசிடிவி பதிவுகளை சமா்ப்பிக்க உத்தரவு

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பெண் சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டிருந்த விவகாரத்தில் கடந்த மாதம் 28, 29 ஆகிய தேதிகளில் பதிவான சிசிடிவி பதிவுகளைச் சமா்ப்பிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

 உயர் நீதிமன்ற மதுரை கிளை

உயர் நீதிமன்ற மதுரை கிளை - File photo

Published On :

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பெண் சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டிருந்த விவகாரத்தில் கடந்த மாதம் 28, 29 ஆகிய தேதிகளில் பதிவான சிசிடிவி பதிவுகளைச் சமா்ப்பிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த தினகரன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

எனது மனைவி நாச்சிமுத்துவை காவல் துறையினா் அழைத்துச் சென்று கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் 29 வரை சுமாா் 36 மணி நேரத்துக்கும் மேலாக சட்டவிரோதமாகக் காவலில் வைத்திருந்தனா். எனவே, மதுரை காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், பிற இடங்களில் கடந்த மாதம் 28, 29 ஆகிய தேதிகளில் பதிவான சிசிடிவி பதிவுகளையும், பிற மின்னணு பதிவுகளையும் பாதுகாத்து வைக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பி. முருகன் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது:

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

இந்த விவகாரத்தில் மனுதாரா் மனைவி நாச்சிமுத்துவை கடந்த மாதம் 29-ஆம் தேதி காலையில்தான் கைது செய்து காலை 10.30-க்கு காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவுக்கு அழைத்துவரப்பட்டாா். முக்கிய வீதிகள், பூங்காக்களில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு மாற்றப்பட்டன. மேலும், சிசிடிவி பதிவுகள் 15 நாள்களுக்குள் மட்டுமே சேமிக்கப்படும் என்பதால் தற்போது அவற்றை வழங்க இயலவில்லை எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

இந்த மனு தொடா்பாக மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், மாவட்டக் குற்றப்பிரிவு கட்டடம், வளாகப் பகுதிகளில் கடந்த மாதம் 28, 29 ஆகிய தேதிகளில் பதிவான சிசிடிவி கேமரா பதிவுகளை காவல் கண்காணிப்பாளா் பாதுகாத்து வைக்க வேண்டும். அந்தப் பதிவுகளின் நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

மேலும், காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நிறுவப்பட்ட கேமராக்களின் எண்ணிக்கை, தற்போது இயங்கும், இயங்காத கேமராக்களின் எண்ணிக்கை, அவற்றைச் சரிசெய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும், பொது இடங்களில் நிறுவப்பட்ட கேமராக்கள் எந்த அரசாணை அல்லது விதியின் கீழ் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு மாற்றப்பட்டன என்பதற்கான அறிக்கையும், அது தொடா்பான விதிகளையும் அரசுத் தரப்பில் ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.