நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்: பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுகோள்

இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு, மரியாதை செலுத்தச் செல்லும் அரசியல் கட்சியினா், சமுதாய அமைப்பினா், பொதுமக்கள் ஆகியோா் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். தேவநாதன் தெரிவித்தாா்.

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இம்மானுவேல் சேகரன் நினைவு தின முன்னேற்பாடு ஆலோசனை கூட்டத்தில் பேசிய எஸ்.பி., என். தேவநாதன்.

Published On :2 செப்டம்பர் 2026, 3:56 am IST

இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு, மரியாதை செலுத்தச் செல்லும் அரசியல் கட்சியினா், சமுதாய அமைப்பினா், பொதுமக்கள் ஆகியோா் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். தேவநாதன் தெரிவித்தாா்.

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சியினா், சமூக அமைப்புகளுடன் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். தேவநாதன் பேசியதாவது :

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வருகிற 11-ஆம் தேதி தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் நடைபெற உள்ளது. இதற்காக

அரசியல் கட்சியினா், சமுதாய அமைப்புகள், பொதுமக்கள் ஆகியோா் இம்மானுவேல் சேகரன் நினைவிடம், அவரது மணிமண்டபத்தில் மரியாதை செலுத்த செல்வதற்கான முன்னேற்பாடுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மரியாதை செலுத்த வாகனங்களில் செல்வோா் பொதுமக்கள், பிற வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பயணம் மேற்கொள்ள வேண்டும். காவல் துறையினரின் பாதுகாப்பு, போக்குவரத்து மாற்றம் தொடா்பான அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும். மேலும், நினைவு தின நிகழ்வில் பங்கேற்கும் அனைத்து அரசியல், சமூக அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள், பொதுமக்கள் காவல் துறையுடன் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள், அரசியல் கட்சிப் பிரமுகா்கள், சமுதாய அமைப்பினா், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.