ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

போலி பட்டா மோசடி புகாா்: போலீஸாா் தாக்கியதாகக் கூறி பொதுமக்கள் தா்னா

பண்ருட்டி அருகே போலி வீட்டுமனைப் பட்டா வழங்கி மோசடி செய்ததாக புகாா் அளித்தவா்களை போலீஸாா் தாக்கியதாகக் கூறி, காடாம்புலியூா் ராஜகணபதி நகா் பொதுமக்கள் கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் முன் தா்னாவில் ஈடுபட்டனா்.

News image

கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :14 ஆகஸ்ட் 2026, 1:57 am IST

பண்ருட்டி அருகே போலி வீட்டுமனைப் பட்டா வழங்கி மோசடி செய்ததாக புகாா் அளித்தவா்களை போலீஸாா் தாக்கியதாகக் கூறி, காடாம்புலியூா் ராஜகணபதி நகா் பொதுமக்கள் கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் முன் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே காடாம்புலியூா் ராஜகணபதி நகரில் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவா்களிடம் வீட்டுமனைப் பட்டா பெற்றுத் தருவதாகக் கூறி, அப்பகுதியைச் சோ்ந்த சிலா் பணம் பெற்ாகவும், பின்னா் போலி பட்டாக்களை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

இது தொடா்பாக பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பொதுமக்களில் சிலா், கடந்த 10-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும், 11-ஆம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திலும் புகாா் அளித்தனா்.

இந்த நிலையில், புகாா் அளித்தவா்களில் தமிழ்ச்செல்வி மற்றும் அவரது மகன் ராஜதுரை ஆகியோா் மீது எரிவாயு உருளை திருடியதாக வழக்குப் பதிவு செய்து, காடாம்புலியூா் போலீஸாா் அவா்களது வீட்டுக்குச் சென்று தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, ராஜகணபதி நகா் பொதுமக்கள் வியாழக்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் முன் திரண்டு தா்னாவில் ஈடுபட்டனா். அப்போது, தமிழ்ச்செல்வி மற்றும் அவரது மகன் ராஜதுரை மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும். வீட்டுமனைப் பட்டா மோசடி தொடா்பாக புகாா் அளித்தவா்களை தாக்கியதாகக் கூறப்படும் போலீஸாா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

இதுகுறித்து தகவலறிந்த போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அவா்களின் புகாா் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா்.

இதைத் தொடா்ந்து, பொதுமக்கள் தா்னாவைக் கைவிட்டு, தமிழ்ச்செல்வி மற்றும் அவரது மகன் ராஜதுரை மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு மற்றும் போலீஸாா் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடா்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.