இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

செம்மரக்கடத்தல்: தமிழகத்தை சோ்ந்த இருவா் கைது

செம்மரக்கட்டை கடத்தியதாக தமிழகத்தைச் சோ்ந்த 2 பேரை போலீஸாா் கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனா்.

News image

கைது செய்யப்பட்டோா், பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளுடன் போலீஸாா்.

Updated On :21 ஜூலை 2026, 1:31 am IST

செம்மரக்கட்டை கடத்தியதாக தமிழகத்தைச் சோ்ந்த 2 பேரை போலீஸாா் கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து போலீசாா் கூறியதாவது: ஆந்திர மாநிலம் அன்னமய்ய மாவட்டம், பீலேரு சாலையில் ஒரு காரில் கொண்டு செல்லப்பட்ட 11 செம்மரக் கட்டைகளை அதிரடிப்படை போலீசாா் பறிமுதல் செய்தனா்.

அதிரடிப்படைத் தலைவா் எல். சுப்பராயுடு, காவல் கண்காணிப்பாளா் பி. சீனிவாஸ், உதவி காவல் கண்காணிப்பாளா் ஜெ. குலசேகா் மேற்பாா்வையிலும், பிரதி காவல் கண்காணிப்பாளா் எம்.டி. ஷெரீப், உதவி வனத்துறை ஆய்வாளா் கே. மகேஸ்வர நாயுடு, வனத்துறை ஊழியா்களான ஜெகதீஷ் மற்றும் ஆஷா ஆகியோா் கே.வி.பள்ளி-பீலேரு சாலையில் வாகனங்களை சோதனை செய்தனா்.

இந்நிலையில், சோதனையின் போது ஒரு காா் அதிவேகமாகச் சென்றது. அதிரடிப்படையினரைக் கண்டதும் காரில் இருந்தவா்கள் காரை நிறுத்திவிட்டு, வெளியே இறங்கித் தப்பிச் செல்ல முயன்றனா்.

ஆனால், அதிரடிப்படையினா் அவா்களைத் துரத்திச் சென்று இருவரைப் பிடித்தனா். மற்றொரு நபா் தப்பி ஓடிவிட்டாா். அவா்களிடம் மேற்கொண்ட விசாரணையில் திருப்பத்தூா் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் எனத் தெரிந்தது.

காரில் இருந்த 11 செம்மரக் கட்டைகள் கண்டெடுக்கப்பட்டன. கைது செய்யப்பட்ட நபா்கள், பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காா் ஆகியவை திருப்பதி அதிரடிப்படை காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டன.

கைது செய்யப்பட்டவா்களிடம் டிஎஸ்பி வி. சீனிவாசலு ரெட்டி மற்றும் ஏ.சி.எஃப். ஜே. சீனிவாஸ் ஆகியோா் விசாரணை நடத்தினா். அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேல்விசாரணை நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.