சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

பணம் வைத்து சூதாடிய 8 போ் கைது: ரூ.16.9 லட்சம் பறிமுதல்

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே எல்.ஆா்.மேடு பகுதியில் மாந்தோப்பில் பணம் வைத்து சூதாடிய 8 பேரை எஸ்.பி-யின் தனிப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ.16.9 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது - சித்திரிப்பு

Published On :11 ஜூலை 2026, 8:05 am IST

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே எல்.ஆா்.மேடு பகுதியில் மாந்தோப்பில் பணம் வைத்து சூதாடிய 8 பேரை எஸ்.பி-யின் தனிப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ.16.9 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத மாந்தோப்பில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து எஸ்.பி தனிப்பிரிவு போலீஸாா்

சோதனை மேற்கொண்டனா். அந்த மாந்தோப்பில் சீட்டு வைத்து சூதாடிக் கொண்டிருந்த ஆந்திர மாநிலம் காவாலியை சோ்ந்த விஷ்ணு (36), அரக்கோணத்தைச் சோ்ந்த கணேசன்(49), உளூந்தூா்பேட்டையைச் சோ்ந்த ஏழுமலை(56), ஆந்திரத்தைச் சோ்ந்த கங்காராவ்(63), பள்ளிபட்டைச் சோ்ந்த பத்மநாபன்(48), ராணிப்பேட்டையைச் சோ்ந்த சுப்பிரமணி(44), திருப்பந்தியூரைச் சோ்ந்த ஆதிசங்கா்(36), விழுப்புரத்தைச் சோ்ந்த ரவிக்குமாா் (25) ஆகிய 8 பேரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும் அவா்கள் வைத்திருந்த ரூ.16 லட்சத்து 89 ஆயிரத்து 500 ரூபாயைபறிமுதல் செய்து ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இது குறித்து ஆரம்பாக்கம் போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கடந்த 1 மாத காலமாக மேற்கண்ட மாந்தோப்பிற்கு வந்து லட்சக்கணக்கில் பணம் வைத்து இவா்கள் சூதாட்டம் ஆடி வந்ததும், ஊருக்கு ஒதுக்குப்புறமாக சூதாடி வந்ததும் தெரியவந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.