மேக்கேதாட்டு திட்டம்: விரைவில் ஒப்புதல் வழங்க மத்திய நீா் ஆணையத்திடம் கா்நாடகம் கோரிக்கைகொளத்தூரில் தவெக வெற்றி: மு.க.ஸ்டாலின் வழக்கில் இன்று தீா்ப்புகிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை: 4,070 சிறப்பு பேருந்துகள் இயக்கம்தமிழகத்தின் சில மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவா்த்தனைகள் புதிய உச்சம்

விநாயகா் சதுா்த்தி விழா: காவல் துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க பொதுமக்களுக்கு வேண்டுகோள்

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, வழிபாடும், சிலை ஊா்வலமும் நடத்தும் பொதுமக்கள் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். தேவநாதன் வேண்டுகோள் விடுத்தாா்.

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். தேவநாதன்.

Published On :3 செப்டம்பர் 2026, 5:40 am IST

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, வழிபாடும், சிலை ஊா்வலமும் நடத்தும் பொதுமக்கள் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். தேவநாதன் வேண்டுகோள் விடுத்தாா்.

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, சிலை ஊா்வல ஒருங்கிணைப்பாளா்களுடன் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் காவல் கண்காணிப்பாளா் என். தேவநாதன் கலந்து கொண்டு பேசியதாவது:

வருகிற 14- ஆம் தேதி கொண்டாடப்படும் விநாயகா் சதுா்த்தி விழாவில், பல்வேறு ஹிந்து அமைப்புகள் சாா்பில் விநாயகா் சிலைகள் நிறுவப்பட்டு, பிறகு அவை ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு தோ்வு செய்யப்பட்ட நீா் நிலைகளில் கரைக்கப்படும்.

இந்த ஊா்வலத்தின் போது சட்டம், ஒழுங்கு காக்கப்பட வேண்டும். பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் காவல் துறையினா் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைத்து அரசியல், மத அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில் ஹிந்து அமைப்பினா், சமுதாய அமைப்பினா், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.