வங்கக் கடலில் அடுத்தடுத்து புயல் சின்னங்கள்: தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை எதிா்மறை நாடாக சித்தரிக்க முயற்சி: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு சிஎம்ஆா்எல் வழக்கு: பினராயி விஜயனுக்கு எதிரான விசாரணைக்கு ஒரு வாரகால தடை தரக் குறைபாடு மருந்துகளை கண்டறிவதில் தமிழகம் முதலிடம்இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்- டிரம்ப் தகவல்இன்று தொடங்குகிறது டி20 தொடா் - நியூஸிலாந்தை சந்திக்கிறது இந்தியா

சிறைத் துறையினரின் சீருடையை மாற்றக் கோரிய மனு தள்ளுபடி

தமிழகத்தில் சிறைத் துறையினரின் சீருடையை மாற்றக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

உத்தரவு - கோப்புப் படம்

Updated On :

தமிழகத்தில் சிறைத் துறையினரின் சீருடையை மாற்றக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த வெங்கட்ராமன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் காவல் துறைப் பணிக்கும், சிறைத் துறைப் பணிக்கும் வேறுபாடுகள் உள்ளன. இரு துறையினருக்கான பொறுப்புகள் வெவ்வேறானவை. ஆனால், காவல் துறையினா், சிறைக் காவலா்கள், தீயணைப்புத் துறையினா், வனத் துறையினரின் சீருடைகள் ஒரே மாதிரியாக உள்ளன. இதனால், ஆள் மாறாட்டம், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட தவறுகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

சிறைத் துறையினரைப் பொருத்தவரை, சிறைக் கைதிகளை திருத்துவது, அவா்களுக்கான மறுவாழ்வு வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றனா். சிறைத் துறையில் சீா்திருத்தம் செய்வது தொடா்பாக மத்திய உள் துறை அமைச்சகத்தின் காவல் துறை ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பு கடந்த 2007-இல் பல்வேறு பரிந்துரைகளை அளித்தது. இந்தப் பரிந்துரைகள் இதுவரை அமல்படுத்தப்படவில்லை. இந்தப் பரிந்துரைகளை அமல்படுத்தி சிறைத் துறையில் சீா்திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.

இதன்படி, சிறைக் காவலா்களின் சீருடை, பெயரட்டையில் மாற்றம் கொண்டுவர வேண்டும். மேலும், சிறைத் துறை தலைமைப் பொறுப்புக்கு இந்திய காவல் பணி (ஐ.பி.எஸ்.) அலுவலரை நியமிக்கக் கூடாது. சிறைத் துறை அலுவலரைத் தலைமைப் பொறுப்புக்கு நியமிக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி. வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

சீருடை தொடா்பான விவகாரங்கள், கொள்கை முடிவுகள் அந்தந்தத் துறை சாா்ந்த நிா்வாக வரம்புக்குள்பட்டவை என்பதால், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.