தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

மனமகிழ் மன்றத்தை அகற்ற கோரிய மனு தள்ளுபடி

மதுரை கருப்பாயூரணியில் செயல்பட்டு வரும் மனமகிழ் மன்றத்தை அகற்றக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

உத்தரவு - கோப்புப் படம்

Updated On :

மதுரை கருப்பாயூரணியில் செயல்பட்டு வரும் மனமகிழ் மன்றத்தை அகற்றக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த சுப்பையா வைரமுத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

மதுரை கருப்பாயூரணியில் உள்ள மனமகிழ் மன்றம், விதிகளை மீறி அரசு மதுக் கடை போல செயல்பட்டு வருகிறது. இந்த மனமகிழ் மன்றத்தை அகற்ற வேண்டும் என கிராம ஊராட்சியில் கடந்த 2- ஆம் தேதி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

எனவே, இந்த மனமகிழ் மன்றத்தை அகற்றவும், அதன் உரிமத்தை ரத்து செய்யவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி. வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

கருப்பாயூரணியில் மனமகிழ் மன்றம் தேவையில்லை என கிராம ஊராட்சியில் தீா்மானம் நிறைவேற்றியது வரவேற்கத்தக்கது. இருப்பினும், யாரும் மதுக் கடைக்கு போக மாட்டோம் என கிராம ஊராட்சியில் ஏன் தீா்மானம் நிறைவேற்றவில்லை?

மனுதாரா் குறிப்பிட்ட அந்த மனமகிழ் மன்றத்தை அகற்றுமாறு கோருவதில் பொதுநலனை விட தனிப்பட்ட உள்நோக்கம் இருப்பதாகத் தெரிகிறது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.