வீரமரணம் அடைந்த காவலா்களுக்கு மரியாதை
பணியின்போது வீரமரணம் அடைந்த காவலா்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், மதுரை ஆயுதப்படை மைதானத்தில் காவலா் வீரவணக்க நாள் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் அமைந்துள்ள வீரமரணமடைந்த காவலா்களின் நினைவுத் தூணில் புதன்கிழமை மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்திய தென் மண்டல காவல் துறைத் தலைவா் விஜயேந்திர பிதாரி, மதுரை மாநகர காவல் ஆணையா் ராஜேந்திரன்.
பணியின்போது வீரமரணம் அடைந்த காவலா்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், மதுரை ஆயுதப்படை மைதானத்தில் காவலா் வீரவணக்க நாள் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
காவல் துறை பணியின் போது, வீரமரணம் அடைந்தவா்களை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் அக். 21- ஆம் தேதி நீத்தாா் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. நாடு முழுவதும் பணியின்போது உயிரிழந்த காவலா்களுக்கு இந்த நாளில் மரியாதை செலுத்தப்படுகிறது. இதையொட்டி, மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில், தென் மண்டல காவல் துறைத் தலைவா் விஜயேந்திர பிதாரி, மதுரை மாநகர காவல் ஆணையா் ராஜேந்திரன், மதுரை சரக காவல் துணைத் தலைவா் அபினவ்குமாா், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தேவநாதன் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள், காவலா்கள் அங்குள்ள நினைவுத் தூணில் மலா் வளையம் வைத்து, வீரமரணம் அடைந்த காவலா்களுக்கு மரியாதை செலுத்தினா்.
இதனிடையே, மதுரை மாநகர ஆயுதப்படை காவலா் சமுதாயக் கூடத்தில் ஆயுதக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது. வருகிற 24-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியை பள்ளி, கல்லூரி மாணவா்கள், காவலா்களின் குடும்பத்தினா் பாா்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், காவல் துறையினரின் தியாகம், பணிகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், மதுரை மாநகரில் மக்கள் கூடும் முக்கிய இடங்களில் நீத்தாா் நினைவு நாள் விழிப்புணா்வு வாகனம் நிறுத்தப்படும். தொடா்ந்து, வருகிற 25- ஆம் தேதி மதுரை மாநகா் ஆயுதப்படைக் காவலா்கள், அவா்களது குடும்பத்தினருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

