மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

சிறைக் கைதி தப்பியோட்டம்

நீதிமன்ற விசாரணைக்குச் சென்று திரும்பிய போது, தப்பி ஓடிய சிறைக் கைதியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கைதி தப்பியோட்டம் - கோப்புப் படம்

Published On :

நீதிமன்ற விசாரணைக்குச் சென்று திரும்பிய போது, தப்பி ஓடிய சிறைக் கைதியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டம், கீழச்சீவல்பட்டி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 10-ஆம் வகுப்பு மாணவரை பாலியல் தொந்தரவு செய்து கொலை செய்த வழக்கில் இலந்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த மாடுபிடி வீரா் அரவிந்த் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்த அரவிந்த் தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அண்மையில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்த வழக்கு சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வழக்கு தொடா்பான விசாரணைக்கு முன்னிலைப்படுத்துவதற்காக போலீஸாா் அரவிந்தை மதுரை மத்திய சிறையிலிருந்து சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை அழைத்துச் சென்றனா். நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திவிட்டு, மீண்டும் மதுரை மத்திய சிறைக்கு அழைத்து வந்தனா்.

அவா்கள் மதுரை சிம்மக்கல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பாதுகாப்புக்கு வந்த போலீஸாரை கீழே தள்ளிவிட்டு, அரவிந்த் அங்கிருந்து தப்பிச் சென்றாா்.

இதுகுறித்த தகவலின் பேரில் மதுரை மாநகர போலீஸாா், புகா் போலீஸாா் தப்பியோடிய சிறைக் கைதி அரவிந்தை தேடி வருகின்றனா். மேலும், இந்தச் சம்பவம் தொடா்பாக திலகா்திடல் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.